வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
ஒரு கல்பம் என்பது பிரம்மாவின் ஒரு நாள், அதன் முடிவில்தான் மகாபிரளயம் தொடங்குகிறது. அடுத்து, இராசி சக்கரங்கள் அல்லது கோள்களின் நிலையைக் குறிக்கும் இராசிகளின் எண்ணிக்கையும் ஒரு வரையறைக்குள் மட்டுமே உள்ளது. எப்படி? ஒரே ஒரு கோள், சூரியன் மட்டும்தான் என்று வைத்துக் கொள்வோம். அது நிச்சயம் 12 வீடுகளில் ஒன்றில்தான் இருக்கும்; அது போலவே செவ்வாய் மற்றும் இதர கோள்களும் இருக்கும். 12 இடங்களில் சூரியனும் 12 இடங்களில் செவ்வாயும் எங்கேனும் இருக்குமெனில், அவை 122 அல்லது 144 என பல்வேறு நிலைகளில் இருக்கும். இவற்றுடன் 12 இடங்களில் வியாழன் இருக்குமானால் 122 x 12 அல்லது 123
அல்லது 1728 நிலைகளில் இம்மூன்றும் இருக்கும். அதுபோலவே, 4 கோள்கள் 124 நிலைகளிலும், 5 கோள்கள் 125 நிலைகளிலும், மேலும் தொடரும். இப்பொழுது சாதகக்கட்டமானது ஐந்து கோள்களான, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றுடன், சூரியன், சந்திரன் மற்றும் இராகு (சந்திரனின் சுற்று முனை) ஆகியவற்றையும் கணக்கில் கொண்டுள்ளது. அத்தகைய 8* கோள்களில், உள்வட்டக் கோள்களான புதன் மற்றும் வெள்ளி நீங்கலாக, அவை 126 நிலைகளைக் கொடுக்கும். இப்பொழுது, சூரியனிலிருந்து புதன் 290, வெள்ளி 470
பாகைகளுக்குள் விலகியிருப்பதால், சூரியன் ஒரு குறிப்பிட்ட இராசியில் இருக்கும்போது, புதனானது, சூரியன் இருக்கும் இராசியிலேயே அல்லது ஒரு இராசி முன் அல்லது ஒரு இராசி பின் என இருக்கும், அதுபோலவே வெள்ளியும், சூரியனின் இராசியில் அல்லது அதற்கு அடுத்த இரண்டு இராசிகள் முன் அல்லது இரண்டு இராசிகள் பின் இருக்கும். மறுமொழியில் சொல்வதென்றால், ஏற்கனவே நாம் பெற்ற எண்கள், புதனின் கணக்கிற்காக மூன்று மடங்கு அதிகரிக்கும் மற்றும் வெள்ளிக்காக ஐந்து மடங்கு அதிகரிக்கும். அதன்படி எண்ணானது 126 x 3 x 5 என அதிகரிக்கும். இதனுடன் 12 இலக்கினங்களையும் இணைப்போம். எனவே மொத்த இராசிச் சக்கரம் என்பது 126 x 3 x 5 x12 = 127 x 15 =
537477120. எனவே, புவி ஆண்டுகளின் எல்லை என்பது 4320000000 என வரையறுக்கப்படும் நிலையில், அந்தக் கால அளவில் இராசிச்சக்கரங்களின் எல்லை என்பது 537477120 என வரையறுக்கப்படும். எனவே இந்த எண்ணிக்கையானது, சாதக இராசிச் சக்கரங்களின் எண்ணிக்கை முடிவில்லாதது என்றும் அதில் மாற்றம் என்பதன் கால அளவு முடிவில்லாது என்றும் கூறுகின்ற தவறானக் கூற்றினைப் பொய்யாக்குகின்றது. அதே வேளையில், நாடிகிரந்தம் என்பது கல்ப காலத்தையும் தாண்டியது, அது எண்ணிலடங்கா சக்கரங்களைக் கொண்டது என்ற கூற்றும் பொய்யாகிறது. எனவே எண்ணற்ற சக்கரங்கள் என்பது உண்மையில் இல்லை, மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே, 12 இராசிகளில், இராசிமண்டலக் கணிதப்படி சாத்தியக்கூறு உடையது. ஆனால் அவர்கள் இத்தகைய நிலைகளைக் கணக்கில் கொள்வதில்லை, மிக எளிய காராணம், கோள்களின் நகர்வு பற்றி அவர்களாகவே வைத்துகொண்டக் கணக்கு மற்றும் குறிப்பிட்ட நிலைகளை அதன் பொருட்டு அமைத்துக் கொள்வது என்பதாகும். அடுத்து, 537477120 சாதக இராசிச் சக்கரங்களில், அது இன்னும் குறையும், அதாவது அதில் நிறைய எண்ணிக்கை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கானது (பகுதி-3 விலங்கு மற்றும் தாவர சாதகங்கள்). அடுத்து, தற்போதைய கலியுகத்தினைத் தவிர வேறெந்த காலத்தையும் நாடிகிரந்தம் கொண்டிருப்பதில்லை, அதேபோல், வேறு யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் சக்கரங்களையும் கொண்டிருப்பதில்லை. இப்போது, இராசி மண்டலப் பிரிவில் கோள்களின் நிலைக்கேற்ப உள்ள பல்வேறு சாதகங்களும், இன்னும் துள்ளியமாகப் பிரிக்கப்பட்டு, அதாவது நவாம்சம், திரிசாம்சம், ஹோரை, திரேக்காணம், துவாதசாம்சம் என்று பலவாறு பிரிக்கப்பட்டுள்ளபோது, ஏற்படும் கேள்வி என்னவெனில், நாடிகிரந்தம் இத்தகைய பிரிவுகளை கருத்தில் கொள்கிறதா என்பதுடன், அவ்வாறு இல்லையெனில் எந்த அடிப்படையில் கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன.
[*யுரோனஸ், நெப்டியூன் மற்றும் இதர தொலை நோக்கிக் கோள்கள் குறிப்பிடத்தக்க
மாற்றங்களை மனித வாழ்வில் ஏற்படுத்துவதில்லை]
[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment