வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
360 பாகைகள் கொண்ட சுற்றுவட்டப்பாதையானது, ஒவ்வொன்றும் 30 பாகைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் இராசிமண்டலத்தின் ஒரு வீடு என உள்ளது. ஒவ்வொரு வீடும், நாடிகிரந்தத்தில் 150 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அம்சம் என அழைக்கப்படுவதுடன், இந்த அம்சங்கள் குறிப்பிட்ட பெயரில், அதாவது வசுதா, வைஷ்னவி, பரணி, கலா குதா, அஹி, சங்கரி என்று இன்னும் பல பெயர்களால் அழைக்கப் படுகின்றன. சுற்றுப்பாதையின் ஒரு பாகையானது, அத்தகைய ஐந்து பகுதிகளைக் கொண்டிருப்பதுடன், அத்தகைய ஒருபகுதி மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பூர்வபாகம், உத்திரபாகம், அதாவது முதல் பாகம் இரண்டாவது பாகம் எனக் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு அரைப்பகுதியும், நாடிகிரந்தத்தில் ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது, மேலும் இந்த அரைப்பகுதியானது 6 நிமிட இடைவெளியைக் குறிக்க, மேலும் அது நேரத்தில் ஒரு விகதிகா அல்லது 24 நொடிகளைக் குறிக்கின்றது. அதன்படி, நாடிகிரந்தமானது ஒரு அம்சத்தில் 3600 சாதகங்களைக் கொண்டிருக்கிறது. இப்போதைய துருவநாடியின் முதல் பாகமானது, வாழும் மனிதர்களின் சுருக்கமான கணக்குகளை, முன்பு கூறிய பல்வேறு அம்சங்களில் கொண்டுள்ளது. இந்த வரைபடமானது, இருக்கும் கோள்களின் நிலையிலிருந்து சற்று மாற்றங்களுடன், தன்னிச்சையாக, ஏறக்குறைய ஒத்துவரும் நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளியானது ஒரு மனிதனின் வாழ்வின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறது. இப்பொழுது, மனித சாதகத்தினைப் பொருத்தவரையில், கோள்களின் நிலையுடன் அம்சங்கள் ஒரு விதியுடன் உள்ளன. எனக்கு எழும் நீண்டகால சந்தேகம் என்னவெனில், அத்தகை விதித் தொடர்பு இருக்க வேண்டும். இல்லையெனில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அத்தகைய நீண்ட கால அளவில், கோள்களின் இருப்பிட நிலையினைத் துள்ளியமாகக் தெரிவிக்க இயலாது அல்லவா. முன்பு சொன்ன தொகுதியின் பக்கங்களை நான் ஆய்வு செய்தேன், அதில் அதன் ஆசிரியர் ஒரு இடத்தில் கூறியதாவது:-
“நாம் இப்போது மனிதனின் பிறப்புடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்களுக்கான கோள்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முறையைப் பார்ப்போம்.”
மிகக் கசப்பான ஏமாற்றத்துடன் கூடிய ஒரு சிலிர்ப்பான மகிழ்ச்சி என்னைக் கடந்து போகிறது. அந்தத் தகவல்களைக் கொடுப்பதாகச் சொல்லும் பக்கம் அங்கு இல்லை. நான் ஆய்வு செய்த அந்தப் புத்தகத்தில், யாரோ ஒரு அறிவாளி அந்தத் தகவல்கள் அடங்கியப் பக்கத்தைக் கிழித்து எடுத்துச் சென்றுள்ளார். எங்களது வாசகர்களுக்கு நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், துருவ நாடியின் முதல் பாகத்தின் இன்னொரு புத்தகம் இருக்குமானால் அதனை ஆய்வு செய்யவும்.
[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment