வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
நாம் இப்போது, இந்த அறிவியலின் சில பிரிவுகளான பிரசன்னம் அல்லது ஆருட சாஸ்திரம், ஹோரை சோதிடம் என்பவை பற்றி சில வார்த்தைகள் பார்ப்போம். இவைகள், சாதகம் அல்லது பிறப்புக் குறிப்பு என்பவற்றிலிருந்து மாறுபாடு கொண்டவை; சாதகம் என்பது அறிந்த கோள்கள், சூரியனைச் சுற்றிவருவதனை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பின்னதோ, கீழ்வானில் சுற்றி வருவதாகக் கருதப்படும் காண முடியாத கோள்களின் அடிப்படையிலானவை. அவற்றின் சுற்று விதியானது மிகவும் எளிமையானது. அந்தக் கோள்கள், எட்டுவகையானவை, கீழ் வரும் வரிசையில் சுற்றுகின்றன: சூரியன், செவ்வாய், வியாழன், புதன், வெள்ளி, சனி, சந்திரன் மற்றும் இராகு, ஒவ்வொன்றும் ஒன்றறை இடைவெளியில், அதாவது ஒவ்வொன்றிற்கும் 45o இடைவெளியில், இந்த கீழ்வானத்தை ஒரு முழு நாளில் அல்லது 24 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன – ஒவ்வொரு உதயத்தின் போதும் சூரியன் மேசத்தின் முதல் புள்ளியில், கீழ்வானம் அவற்றின் சுற்று வட்டப்பாதை, அது 12 சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய அடையாளங்களுடன், ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை முறையே, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகியவற்றின் மேல் உள்ளன. சூரியனையும், அதனை வட்டமாகச் சுற்றிவரும் கோள்களையும் சோதிடர் உருவாக்குகிறார். எழுப்பப்படும் வினாவின் (இராசி இருக்குமிடத்தைப் பொருத்து) திசை குறிக்கப்படுகிறது, அதே நேரத்தில், காணாக் கோள்களின் நிலையும் குறித்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் கணிதமுறையின் விரிவான விவரத்தை நம்மால் குறிக்க முடியாது. சோதிடர் கேள்வியின் பொருளை ஆராய்கிறார் அதன் பின் தம்மிடம் உள்ள புத்தகங்களின் உதவியுடன் தம் கணிப்பை சொல்கிறார். இதில், சோதிடத்தின் இன்னொரு துறையான அங்கவித்யா அல்லது சேஷ்ட சாஸ்திரம், அதாவது மனிதனின் உறுப்பசைவு, வார்த்தை பிரயோகங்கள் மற்றும் அது போன்ற செயல்பாடுகள் அவருக்கு உதவி புரிகின்றன. அங்கவித்யா எனும் கோட்பாடானது, சோதிடர் தமது புத்திசாலித்தனத்தின் உதவியுடன் (அவர் யாரென்று தெரியாத நிலையிலும்) அந்த நேரத்தில் நடைபெறும் செய்கைகளை வைத்து பலவழிகளில் அறிந்துணரும் கலையாகும் (பகுதி 51 – வராகமிகிரரின் பிருகத் சம்ஹிதா).
[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment