வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
கோள்கள் சுற்றுவட்டப்பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு நொடியிலும் அவைகளின் இருப்பிடங்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. எனில், எந்தக் காலக் கட்டத்தில், கோள்கள் தாங்கள் இருந்த இடத்திற்கு மீண்டும் வரும் எனும் கேள்வி எழுகிறது. இது கணிதம் சார்ந்தது, 7 அல்லது 8 எனும் எண்களின் மீச்சிறு பொதுப் பெருக்கம் சார்ந்தது. இத்தகைய எண்கள், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களும் மற்றும் சந்திரன் சூரிய வீதியைச் சுற்றி வரும் கால அளவைக் கொண்டது – முறையே.,
புதன்
|
87.9693
|
நாட்கள்
|
வெள்ளி
|
224.7008
|
நாட்கள்
|
பூமி
|
365.2564
|
நாட்கள்
|
செவ்வாய்
|
686.9795
|
நாட்கள்
|
வியாழன்
|
4332.5848
|
நாட்கள்
|
சனி
|
10759.22000
|
நாட்கள்
|
சந்திரன்
|
27
|
நாட்கள் 7 மணி 45 நி 11.5 நொ
|
இதன் மீச்சிறு பொது பெருக்கம் என்பது 4,320,000,000 ஆண்டுகள், அது இந்து வானியல் கணக்கான ஒரு கல்பத்திற்கு சமம். அதன்படி, அனைத்து கோள்களும், மேசத்தின் ஆரம்புள்ளிக்கு, அதாவது, கிரீன்வீச் தீர்க்க ரேகையிலிருந்து கிழக்கே 76 எனும் இடமான இலங்கைக்கு மீண்டும் வந்து சேரும். ஒரு கல்பம் என்பது 1000 சதுர்யுகம் ஆகும். ஒரு சதுர்யுகம் என்பது 4320000 ஆண்டுகள், அதன்படி கலியுகமானது 432000 ஆண்டுகள் ஆகும்.
துவாபரயுகம் 432000 x 2 = 864000 ஆண்டுகள்
திரேதாயுகம் 432000 x 3 = 1296000 ஆண்டுகள்
கிருதயுகம் 432000 x 4 = 1728000 ஆண்டுகள்
[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment