வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
தவறாய் போவதற்கான மூன்றாவது காரணம் உள்ளூர் நேரம் பற்றிய அறியாமை. இன்றைய நாட்கள் சுவர்க்கடிகாரத்தையும் கைக்கடிகாரத்தையும் கொண்டிருக்கின்றன, அவை நகர மக்களுக்கு சொகுசுப் பொருட்கள், ஆனால் கிராம மக்களுக்கு இன்னும் சென்று சேராதவை. மேலும், இத்தகையக் கடிகாரங்கள் அறிதாகவே உள்ளூர் நேரத்தைக் காட்டுபவையாக தயாரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், இக் கடிகாரங்கள் மதராஸ் நேரத்தையே காட்டுகின்றன, மனிதனின் நிழலினை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் ஏதும் இல்லை. அட்ச ரேகையினால் சூரியனின் இருப்பிடத்தில் கணக்கிடுவதில் திருத்தங்களும் சூரிய சுற்றுப்பாதையில் சூரியனின் இருப்பிடக் கணக்கும் பார்க்கப்படுவதில்லை. இரவில், வானம் தெளிவாக இருக்குமானால், தீர்க்கக் கோட்டின் மீது குறிப்பிட்ட விண்மீன்களின் பயணம் கண்காணிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் ஒரு தோராயமான அட்டவணைத் தயாரிக்கப்படுகிறது.
“திருவோணம் உச்சியைக் கடுக்கும்போது, மேசம் 2¾ கதிகள் அதிகரிக்கும்” எனும் அடிப்படையில் உள்ளூர் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. இதன் முதலிடத்தில் அட்டவணை தோராயமாகவும், இதன் இரண்டாமிடத்தில், நேரமானது, யோகதாரா அல்லது அத்தொகுதியின் முதன்மை விண்மீன் தீர்க்கக் கோட்டைக் கடக்கும் நேரமும் கணக்கிடப்படுகின்றன. ஒரு தொகுப்பின் யோகதாரவிற்கும், மற்றொரு தொகுப்பின் யோகதாரவிற்கும் இடையில் உள்ள நேரக் கணக்கினால் இந்த அட்டவணை உபயோகமற்றுப் போகிறது. மேலும் பெரும்பாலனவர்கள் யோகதாராவைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை என்பதோடு தீர்க்கக் கோட்டின் சரியான இருப்பிடத்தையும் அறிந்திருப்பதில்லை; மேலும் விண்மீனை நோக்கும்போது கிழக்கு அல்லது மேற்கு தீர்க்கக் கோட்டில் உள்ளதையே பார்த்து, அது பயணிப்பதாகக் கருதுகிறார்கள். இரவானது மேகமூட்டத்துடன் இருக்குமேயானால், நேரமானது யூகத்தின் அடிப்படையிலேயே குறிக்கப்படுகிறது. எனவே, நிறையத் தவறுகள், இலக்கினத்தைக் கணிப்பதில் ஏற்படுகின்றன; இவ்வாறு இது நிகழ்கையில், இது எல்லாவற்றையும் பாதிக்கிறது. இத்தவறானது, கோள்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் நாட்காட்டியிலும் ஏற்படுகிறது. எனவே, தற்போதைய சாதகங்களில் நூறுசதவீதம் சரி என்பது தவறாகவே உள்ளது. இது போன்ற சாதகங்கள் தான், தம்மைச் சோதிடர் என்று கூறிக்கொள்பவர்களின் கையில் உள்ளது. பெரும்பாலன ஏழை இந்தியச் சோதிடர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக, இந்த அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும், தங்களுக்கு நல்ல எதிர்காலத்தைக் கூறினால் மட்டுமே பணம் கொடுக்கிறார்கள்; சோதிடர்கள் தீய பலனைச் சரியாக கணித்தால், அவர்களுக்கு சன்மானம் கிடைக்காமல் போவதுடன், அவர் ஒரு மோசமான சோதிடராக கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, யாரும் அவரை நோக்கி செல்லாத சூழலும் ஏற்படுகிறது. எனவே சோதிடர், மோசமான பலன் பற்றி அறிய நேரிட்டாலும், அதனை மறைக்கும் நிலைக்கு உள்ளாகிறார், அதன் விளைவாக, அத்தகைய சோதிடர்களின் கணிப்பு தவறாகி, சோதிடம் பொய்யென்று ஆகிறது. எனவே தமக்கு ஆதரவு தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, தமது சோதிட பாடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்திவிட்டு, முன்பு சொன்ன கருப்பு கலையைப் (மாயக்கலை), பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.
[*இது 1885 ஆண்டின் காலக் கட்டத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் எழுதியது]
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
No comments:
Post a Comment