Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, February 15, 2016

வியாழனின் பார்வை படாத குழந்தைகள் - பிருகத் ஜாதகா – 68


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஆறு

பால அரிஷ்டம் அல்லது குழந்தைப் பருவ மரணம்

10.          பிறக்கும் நேரத்தில், சனி, சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் முறையே, 12வது, 9வது, மற்றும் 1வது மற்றும் 8வது வீட்டில் இருந்தால், அந்தக் கோள்கள் வியாழனால் பார்க்கப்படாமலோ அல்லது சேர்ந்தோ இல்லாமல் இருந்தால், குழந்தை பிறந்தவுடன் இறந்து விடும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

நான்கு கோள்களையும் வியாழன் பார்க்க வேண்டுமெனில், அது 5வது வீட்டில் இருக்க வேண்டும். வியாழனானது நான்கு கோள்களில் சிலவற்றைப் பார்க்க அல்லது அது நான்கு கோள்களைப் பார்த்தாலும் பலம் குன்றி இருந்தால், குழந்தை இறந்து விடும். ஆகவே, குழந்தை இறப்பில் இருந்து தப்பிக்க, வலிமை மிகுந்த வியாழன் நான்கு கோள்களையும் பார்க்க வேண்டும்.


11.          பிறக்கும் நேரத்தில், சந்திரன்(1) ஒரு அசுபக் கோளுடன், 5வது, 7வது, 9வது, 12வது, 1வது, அல்லது 8வது வீட்டில் இருக்க, அது வலிமை மிகுந்த சுக்கிரன், புதன் அல்லது வியாழனுடன் சேர்ந்தோ அல்லது பார்க்கப்படமாலோ இருந்தால், குழந்தையானது பிறந்த பிறகு இறந்துவிடும்.


குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

 சாராவளியின்படி, சந்திரன் என்பது தேய்பிறைச் சந்திரன்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-2016



No comments: