சோதிடம்
என்பதே
கோள்களின்
அசைவினை
வைத்து
கணிக்கப்படுவதுதான்.
சாதகம்
என்பது
இராசிக் கட்டத்தினை அடிப்படையாக வைத்து கணக்கிடுவதுதான் என்றாலும், அந்த இராசிக் கட்டத்தில்
கோள்கள் எவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன என்றும் அவைகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றியும்
அலசி ஆராய்ந்து தொகுத்து பலன் உரைப்பதுதான் சோதிடக் கணிதம் ஆகும். இங்கு கோள்கள் என்பன
எவை எவை என்பது பற்றி நாம் ஏற்கனவே விளக்கிவிட்டோம்.
சோதிடத்தில்,
விண்மீனாகிய சூரியனும் கோள்தான், பூமியின் துணைக் கோளான சந்திரனும் கோள்தான், கற்பனை
முனைகளான இராகுவும் கேதுவும் கோள்கள்தான். ஆனால், பூமியை நாம் கோள்களின் கணக்கில் எடுத்துக்
கொள்வதில்லை. அதுபற்றி நாம் ஏற்கனவே விளக்கி விட்டோம். ஆகவே சோதிட விதிகளின்படி கோள்கள்
என்பன முறையே – சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு மற்றும்
கேது எனும் ஒன்பது கோள்கள் ஆகும்.
வானியல்
(Astronomy) கோட்பாட்டின்படி – சூரியன் மற்றும் அதன் கோள்களான சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவற்றின் இயல் தன்மைகள் பற்றியும் நிமித்திகனின் ஆரம்ப
தொடர்களிலேயே விளக்கி விட்டோம். அதாவது, மேற்சொன்ன கோள்களின் இயற்பியல் தன்மைகள் –
எடை, நிறை, அளவு, தூரம் போன்றவையும், வேதியியல் தன்மைகள் – தனிமங்கள், வாயுக்கள் போன்றவையும்
குறித்து ஓரளவு தொகுத்துள்ளோம்.
அத்தகைய
இயற்பியல், வேதியியல் தன்மைகள் எந்த அளவிற்கு சோதிட வரையறைகளுடன் ஒத்து போகின்றன அல்லது
சோதிடத் தன்மைகளை அவற்றோடு ஒப்பிட முடியுமா என்பன பற்றியெல்லாம் நாம் ஆராய வேண்டியுள்ளது.
எனவே,
மேற்சொன்ன ஒன்பது கோள்களுக்கும் உரிய சோதிட வரையறைகளை அவற்றின் இயல் தன்மைகளோடு ஒப்பிட்டு
ஆராய முயலவேண்டும். எடுத்துக்காட்டாக, சனிக் கோளானது சோதிட வரையறைப்படி, கால தாமதத்திற்கு
காரணமாக இருக்கிறது. அதன் இயல் தன்மையின் படி, சூரியக் குடும்பக் கோள்களில் மிக நீண்ட
தொலைவிலும், ஒருமுறை சூரியனைச் சுற்றிவருவதற்கு மற்றக் கோள்களைவிட அதிக நாட்கள், அதாவது
30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வதையும் கணக்கில் கொண்டால், தாமதம் என்பது சோதிட விதியோடு
பொருந்தி வருவதை அறிய முடியும். அதுபோல் சோதிட வரையறையின்படி, சூரியன் உயிர் நிலைக்கு
காரணம் எனவும், சூரியனின் வேதியியல் விதியானது, ஒரு அணு எண் கொண்ட ஹைட்ரஜன் நிறைய இருப்பதும்,
அது வேதிவினைப்படி இணைந்து இரு அணு எண்கள் கொண்ட ஹீலியமாக மாற்றம் அடைவதும், அதாவது
ஆரம்ப உயிர்நிலை எனும் கருத்தோடு ஒன்றிப்போவதையும் ஒப்பிட முடிகிறது. இதுபோலவே கோள்களுக்கான
மற்ற சோதிட வரையறைகளும் பொருந்துகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.
இனி,
தொடர்ந்து ஒவ்வொரு கோளினையும் அதன் சோதிட வரையறைகளை, அவற்றின் இயல் தன்மையோடு ஒப்பிட்டு
காண முயல்வோம்.
முதலில் …..சூரியன்
No comments:
Post a Comment