சூரியக்
குடும்பத்தில் முதல் சுற்றுக் கோளாக புதன் இருந்தாலும், நமது சோதிட முறைகளில் இரண்டாவது
முக்கியத்துவம் பெரும் கோள் சந்திரன். சந்திரன் பூமியின் துணைக் கோளாக இருந்தாலும்,
சோதிட விதிப்படி அது கோள்களின் கணக்கில்தான் வருகிறது.
ஏனெனில்
சோதிடம் என்பது பூமியில் வாழும் உயிர்களுக்கானது. இந்த பூமியானது சூரியனையும் சந்திரனையும்
முழுமையாகச் சார்ந்துள்ளது. சந்திரன் பூமியின் துணைக் கோள் என்றாலும், சந்திரனைத் தனி
ஒரு சக்தியாகவே நமது முன்னோர்கள் தொழுது வந்துள்ளனர்.
சந்திரன்
தேய்ந்து வளர்ந்து வந்தாலும், அதன் ஒளி முழுமையாக எல்லா இரவுகளிலும் நமக்கு கிடைப்பதில்லை
என்ற போதிலும், சந்திரன் இன்றி பூமி நிலைத்திருப்பது சாத்தியமில்லை எனும் நிலையே உள்ளது.
சந்திரனைப்
பற்றி கற்பனைக் கதைகளும் நம்மிடம் ஏராளம். கவிதைப் பூக்களும் ஏராளம்.
சந்திரனின்
இயல் தன்மைகளைப் பார்ப்போம்.
வானியலாளர்கள் சந்திரன் தோன்றியதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கிறார்கள்.
- (1) பூமியின் சுழற்சியில் உடைந்து திரிந்த பந்து
- (2) சூரியக் குடும்பத்தில் மற்றக் கோள்கள் உருவான போதே சந்திரனும் உண்டாகி விட்டது
- (3) சூரியக் குடும்பத்தில் ஒன்றான சந்திரன் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு மிக அருகில் வந்த போது, பூமியால் இழுக்கப் பட்டு, அதன் சுற்றுப்பாதைக்குள் வந்துவிட்டது.
- (4) செவ்வாயின் அளவு உள்ள ஒருகோள் பூமியைத் தாக்கியதில், அதன் மிச்சம் மீதிகள் சந்திரனாக மாறி இந்த பூமியைச் சுற்றுகின்றன. (இதுவே பொதுவாக தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டக் கொள்கை)
பொதுவாக இந்த நான்கு கொள்கைகளே சந்திரன் உருவாக்கத்தின் காரணங்களாக சொல்லப்படுபவை.
நிலவில் காற்று என்பது ஒரு வெற்றிடம் போல் மிகக் குறைவாக இருப்பதால், பூமியைப் போல் ஒரு தட்பவெப்பக் காப்பு அங்கு இல்லாததால்
சூரியனின் வெப்பம் மிகக் கடுமையாக உள்ளது. அதேபோல் குளிரும் கடுமையாக உள்ளது. வெப்பம் +260 டிகிரியாகவும் குளிர் -260 டிகிரியாகவும் உள்ளது. சந்திரனிலும் எரிமலைகள் உள்ளன. ஆனால் அவை ஆழ்ந்தத் தூக்கத்தில் உள்ளன. விழிப்பது கடினம். சந்திராயன் செயற்கைக் கோள் நிலவில் தண்ணீர் உள்ளது என கண்டுபிடித்துள்ளது. ஆனால் சந்திரனில் கடல் எதுவும் இல்லை.
பூமியை விட்டு சந்திரன் ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச் விலகிப் போவதாக வானியலாளர்கள் சொல்லுகின்றனர். பூமியைத்தவிர மனிதன் காலடிப் பட்ட வேறு இடம் சந்திரன் மட்டும் தான்.
சந்திரனில் ஈர்ப்பு விசைக் குறைவு. அதனால் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் துள்ளிக் குதித்து நடந்ததாக சொல்லப்படுகிறது. (அப்பல்லோ கதை பொய் என்ற கருத்தும் உண்டு). ஆனால் சந்திரனின் ஈர்ப்பு விசையால் தான், பூமியில் கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு என்றும் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி பூமியின் கால அளவில் மாற்றத்தையும் அது உண்டாக்குகிறது.
நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகு என்பது, மற்றக் கோள்களைக் காட்டிலும் மிக அதிகமாக சூரியனின் வெளிச்சத்தை நமக்கு பிரதிபலித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் அழகு. .
சில குறிப்புகள்:
- நிலவு பூமியிலிருந்து ஏறக்குறைய 3.84 இலட்சம் தொலைவில் உள்ளது.
- நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவும் அது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் அளவும் ஏறக்குறைய சமம். அதாவது 27.5 நாட்கள் மற்றும் 29 நாட்கள்.
- அதனால்தான் நமக்கு எப்போதும் ஒரு முகமே காட்டுகின்றது.
- பாறைகளும் படிமங்களும் நிறைந்த ஒரு திடக் கோள் (துணைக் கோள்).
- மிக மெல்லிய சுற்றுச் சூழல் கொண்டது. அதாவது வளி மண்டலம் இலகுவானது.
- நிலவுக்கு நிலவு கிடையாது.
- எளிதில் எல்லோராலும் பார்க்க முடிந்த விண் பொருள்.
- கிரகணங்கள் உருவாக சந்திரனும் பங்கு வகிக்கின்றது.
- நிலவின் சுற்றளவு 10,921 கி.மீ.
- பூமியின் எடையின் 81-ல் ஒரு பங்கு மட்டுமே.
- காணப்படும் தனிமங்கள் – ஆர்சனிக், ஹீலியம், சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன். ஆனால் ஆக்சிஜன் இருப்பதாகத் தகவல் இல்லை.
- நிலவிற்கும் காந்தப் புலம் இருக்கிறது.
சரி
இனி சோதிடத்திற்கு வருவோம்.
சந்திரனின் தொடர்ச்சி அடுத்த
பதிவில்
No comments:
Post a Comment