நாம் சென்ற பதிவில் கூறியபடி, தமக்கும் பிற கோள்களுக்கும், ஒவ்வொரு கோளும் கொடுக்கும் புள்ளிகள் என்பன 337. இத்தகைய புள்ளிகளைக் கோள்கள் எந்த வரிசையில் கொடுக்கின்றன என்பதை, இங்கு ஒரு அட்டவனையில் பதிவிடுவோம்.
இங்கு முதலில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், இந்த கோள்கள் இந்த இடங்களில் இப்படி புள்ளிகள் கொடுக்கும் என்பதற்கு எவ்வித அடிப்படைக் கணக்கீடும் நான் அறிந்த வரையில் கிடைக்கவில்லை. கிடைக்கப் பெற்றவர்கள் தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான கோண அளவீடுகளையும் கணிக்க முடியவில்லை.
ஒரு சாதகத்தில் கோள்களுக்கிடையே இருக்கும் தூரங்கள், கோணங்கள் அடிப்படையில் இவை கணக்கிடப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு கணிதத்தின் அடிப்படையில் இது வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் தெரியவருகிறது. அதாவது பிருகத் ஜாதாகவில் இது பற்றி தனியாக ஒரு பகுதி இருப்பதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடியே, கோள்கள் தரும் புள்ளிகள் தற்போதும் நடைமுறையில் இருப்பதும், இந்த கணிதமுறை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது என்பது மட்டும் அறிய முடிகிறது.
சோதிட நூல்களின்படி, நலப்புள்ளிகள், பிந்து எனவும், நலம் தரா புள்ளிகள் ரேகை (கோடு) எனவும் வழங்கப்படுகிறது. ஒரு கோள் (8x12) 96 புள்ளிகள் தர முடியும் எனும் நிலையில், அதிகபட்சமாக, வியாழன் 56 நல புள்ளிகள் தருகிறது. எனவே, மீதம் உள்ளவை (40) நலம் தரா புள்ளிகள் ஆகும்.
இனி அஷ்டகவர்க்கக் கணிதம் எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் காண்போம். இங்கு முதலில் சூரியனை மட்டும் கணக்கில் கொள்வோம். ஒரு சாதகத்தில் சூரியனானது, தமக்கும், இலக்கினம் மற்றும் பிற கோள்களுக்கும் கொடுக்கும் நற்புள்ளிகளைக் காண்போம்.
சூரியன் – சூரியன் (8)
– 1, 2, 4, 7, 8, 9, 10, 11
சூரியன் – சந்திரன் (4) – 3, 6, 10, 11
சூரியன் – செவ்வாய் (8)
– 1, 2, 4, 7, 8, 9, 10, 11
சூரியன் – புதன் (7)
– 3, 5, 6, 9, 10, 11, 12
சூரியன் – வியாழன் (4) –
5, 6, 9, 11
சூரியன் – வெள்ளி (3)
– 6, 7, 12
சூரியன் – சனி (8) –
1, 2, 4, 7, 8, 9, 10, 11
சூரியன் – இலக்கினம் (6)
- 3, 4, 6, 10, 11, 12
மொத்தம் (48)
மேலே குறிப்பிட்டதில், சூரியன், தான் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11
ஆகிய எட்டு இடங்களில் நற்புள்ளிகளை வழங்கும். அதுபோலவே, சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 3, 6, 10, 11 ஆகிய நான்கு இடங்களில் நற்புள்ளிகளை வழங்கும். இதுபோலவே, பிற கோள்களுக்கும் தாம் இருக்கும் இடத்திலிருந்து மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட இடங்களில் நற்புள்ளிகளை வழங்கும். மொத்தத்தில், சூரியன் தனது பங்காக இலக்கினம் உட்பட அனைத்து கோள்களுக்கும் 48 புள்ளிகளை வழங்கும். ஏழு கோள்கள் ஒரு இலக்கினம் என எட்டிற்கும் 12 வீடுகளில் கிடைக்கக் கூடிய (8 புள்ளிகள் x 12 வீடுகள்) 96 புள்ளிகளில், 48 நற்புள்ளிகளை மட்டுமே வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகபட்சமாகக் கிடைக்கக் கூடிய புள்ளிகள் எட்டு. ஆனால் இங்கு 48 புள்ளிகளை மட்டுமே சூரியன் வழங்கியுள்ளது. அப்படி எனில், மீதம் உள்ள 48 புள்ளிகள் கெடுதல் புள்ளிகள் எனலாம்.அதுபோலவே, பிற கோள்களால் நலப்புள்ளிகள் தராத இடங்கள் கெடு இடங்கள் எனக் கொள்ளப்படுகிறது.
இனி சூரியனின் அஷ்டவர்க்கத்தை ஒரு எடுத்துக்காட்டு சாதகத்தில் பார்ப்போம்.
சுக்
|
ல, சூ
|
பு
|
ரா
|
வி, செ
|
|||
சனி
|
|||
கே
|
சந்
|
இங்கு சூரியன் மேசத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – சூரியன் (8)
– 1, 2, 4, 7, 8, 9, 10, 11 (மே,ரி,கட,து,வி,த,ம,கு)
சந்திரன் கன்னியில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – சந்திரன் (4) – 3, 6, 10, 11 (வி, கு,மி,க)
செவ்வாய் கடகத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – செவ்வாய் (8)
– 1, 2, 4, 7, 8, 9, 10, 11 (கட,சி,து,ம,கு,மீ,மே,ரி)
புதன் ரிசபத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – புதன் (7)
– 3, 5, 6, 9, 10, 11, 12 (கட,க,து,ம,கு,மீ,,மே)
வியாழன் கடகத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – வியாழன் (4) –
5, 6, 9, 11 (வி,த,மீ,ரி)
வெள்ளி மீனத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – வெள்ளி (3)
– 6, 7, 12 (சி,க,கு)
சனி மகரத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – சனி (8) –
1, 2, 4, 7, 8, 9, 10, 11 (ம,கு,மே,கட,சி,க,து,வி)
இலக்கினம் மேசத்தில் இருக்கிறது, அதன்படி
சூரியன் – இலக்கினம் (6)
- 3, 4, 6, 10, 11, 12 (மி,கட,க,ம,கு,மீ)
இவைகளைத் தொகுக்கும்போது –
மேசம் (4); ரிசபம் (3); மிதுனம் (2); கடகம் (5); சிம்மம் (2); கன்னி (5); துலாம் (4); விருச்சிகம் (4); தனுசு (2); மகரம் (5); கும்பம் (7); மீனம் (4).
இதன்படி, சூரியனின் அஷ்டவர்க்கமானது:-
4
|
4
|
3
|
2
|
7
|
சூரிய அஷ்டவர்க்கம்
48
|
5
|
|
5
|
3
|
||
2
|
4
|
4
|
5
|
இவ்வாறே, பிற கோள்களுக்கும் அஷ்டவர்க்கக் கணிதம் செய்யப்படுகிறது. இங்கு, கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், 12 இராசிகளிலும், சூரியனின் நற்புள்ளிகள் சராசரியாக சமம் எனும் நிலையில் இல்லை. அதாவது, 4 புள்ளிகள் (4½) எனும் அளவில் இல்லாமல், சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் குறைந்தும் காணப்படுகிறது. இதன்படி, சராசரிக்கு கீழே இருக்கும் இடங்களில் சூரியன் வரும்போது, சூரியனால் கிடைக்கும் பலன் என்பது குறைந்தும், சராசரிக்கு மேலே இருக்கும் இடங்களில் சூரியன் வரும்போது, சூரியனால் கிடைக்கும் பலன் என்பது மிகுந்தும் இருக்கும் என பொதுவிதியாக சோதிட நூல்கள் கூறுகின்றன. அதன்படி, இந்த சாதகருக்கு கும்பத்தில் சூரியன் வரும்போது மிக நற்பலன்களும், தனது சொந்த இராசியான சிம்மத்தில் வரும்போது குறைவான பலனும் கிடைக்கும்.
இவ்வாறே, பிற கோள்களுக்கும் அஷ்டவர்க்கம் கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்படும் ஏழு கோள்களின் அஷ்டவர்க்கத்தின் கூடுதலைக் கொண்டு சர்வ அஷ்டவர்க்கம் அல்லது முழு அஷ்டவர்க்கம் தயாரிக்கப்படுகிறது. அதன் மொத்த கூடுதல் 337 எனும் நிலையில், சராசரி அளவானது 28 புள்ளிகள் எனும் கணக்கில் இருக்கும். அதன்படி, 28 புள்ளிகளுக்கு குறைவான இடங்களின் பாவங்கள் சிறப்பு இல்லாமலும், 28 புள்ளிகளுக்கும் மேலான இடங்களின் பாவங்கள் சிறப்பாக இருக்கும் எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் நடைமுறையில் நிறைய விதிவிலக்குகள் அதனை மெய்ப்பிக்க முடியாமல் இருக்கிறது. அஷ்டவர்க்க பலன்கள் குறித்த பதிவுகள் எழுதும்போது, இதனை விரிவாகக் காண்போம்.
இனி, இராசிபலன் எப்படி கணிக்கப்படுகிறது என்பதையும், இதற்கு அஷ்டவர்க்கம் எவ்வாறு துணைபுரிகிறது என்பதையும், அடுத்த பதிவில் காண்போம்.
அடுத்து …..இராசிபலன்
1 comment:
அஷ்டவர்க்கம் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Post a Comment