வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதின்மூன்று
சந்திரனின் யோகங்கள்… தொடர்ச்சி
3. சூரியனைத் தவிர பிற கோள்கள், சந்திரனிலிருந்து 2வது அல்லது 12வது அல்லது 2வது, 12வது இரண்டிலும் இருந்தால் அந்த யோகமானது சுனபா யோகம், அனபா யோகம் அல்லது துருதுர யோகம் எனப்படும்; இல்லையெனில்(1) வேறு பல ஆசிரியர்கள் கூறுவது போல் அது கேமதுரும யோகம் எனப்படும். வேறு சிலரின்(2) கருத்துப்படி, இலக்கினத்திலிருந்து கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் அல்லது சந்திரன் இன்னொரு கோளுடன் இருந்தால் அந்த யோகமானது கேமதுரும யோகம் எனப்படும். வேறு சிலரின்(3) கருத்துப்படி, மூன்று யோகங்களான சுனபா, அனபா மற்றும் துருதுர யோகங்கள் சந்திரனிலிருந்து இருக்கும் கேந்திர வீட்டினைக் குறிப்பிடுகின்றன(4); மேலும், வேறு சிலரின்(5) கருத்துப்படி மேற்கூரிய மூன்று யோகங்களும் நவாம்சத்தில் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு இருபுறமும் இருக்கும் வீடுகளைக் குறிக்கின்றன(6). ஆனால் இத்தகைய கருத்துக்களை ஆதாரப்பூர்வமாகக் கருத முடியாது.
குறிப்புகள்:
(1)
இல்லையெனில், அதாவது இந்த மூன்று யோகங்களும் இல்லாத நிலையில்.
(2)
காரகர் மற்றும் பராசரர்
(3)
ஸ்ருதகீர்த்தி மற்றும் சிலர்
(4)
அதாவது, சூரியனைத் தவிர உள்ள கோள்களில் ஒன்று, சந்திரனிலிருந்து 4வது வீட்டில் இருந்தால், அந்த யோகமானது சுனபா யோகம் ஆகும்; அது சந்திரனிலிருந்து 10வது வீட்டில் இருந்தால், அந்த யோகமானது அனபா யோகம் ஆகும், அவை சந்திரனிலிருந்து 4வது மற்றும் 10வது வீட்டில் இருந்தால் அந்த யோகமானது துருதுர யோகம் ஆகும்; சந்திரனிலிருந்து 4வது மற்றும் 10வது வீடுகள் கோள்கள் இன்றி இருந்தால் அந்த யோகமானது கேமதுரும யோகம் எனப்படும்.
(5)
ஜீவசர்மா
(6)
ஒருவேளை, சந்திரன் தனுசுவின் நவாம்சத்தில் இருந்தால். இப்போது, சூரியன், சந்திரனைத் தவிர பிற கோள்கள் தனுசுவிலிருந்து 2வது அல்லது 12வது அல்லது 2வது மற்றும் 12வது ஆகிய இரண்டிலும் இருந்தால் அந்த யோகங்கள் முறையே, சுனபா, அனபா மற்றும் துருதுர யோகம் எனப்படும். ஆனால், இந்த இரண்டு வீடுகளும் ஒருவேளை கோள்களின்றி இருந்தால், அந்த யோகமானது, கேமதுரும யோகம் எனப்படும்.
4. கொடுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள பொருட்களின் இணைவுகளைக் கண்டுபிடிக்கும் விதிகளின் வரையறையின்படி உருவாக்கும் தொடரிகளின் வகைகளின்படி, சுனபா, அனபா யோகங்கள் ஒவ்வொன்றும் முப்பத்தியொன்று வகைகளாகவும், துருதுர யோகம் நூற்றியென்பது வகைகளாகவும் இருக்கும்.
குறிப்புகள்:
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைப் பொருட்களின் இணைவுகளின் எண்ணிக்கையினைக் கண்டுபிடிக்கப்படும் விதியானது, ஒரு குறிப்பாக மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அது முழுமையாக இல்லை. இதுபற்றி, பிருகத் சம்ஹிதாவில் பத்தி-22, பகுதி-79 விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பு (நிமித்திகன்):
இதனைத் தொடர்ந்து தொடரி எண்கள் எவ்வாறு உருவாக்கம் பெருகிறது என்பது பற்றி விரிவாக திரு சிதம்பரம் அவர்கள் விளக்குகிறார். யோகங்கள் பற்றிய ஆய்வினைப் பதிவிடும்போது அக்கணித முறைகள் பின்னர் விளக்கப்படும்.
…….. சந்திரனின் யோகங்கள் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment