வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதின்மூன்று
சந்திரனின் யோகங்கள்… தொடர்ச்சி
5. சுனபா யோகத்தில் பிறந்தவர் சுயமாக சொத்துக்களை அடைவார், அரசராவார் அல்லது அரசருக்கு நிகராக இருப்பர், அறிவுக்கூர்மையாக இருப்பார், சொத்துக்களுடனும் புகழுடனும் வாழ்வார்.
அனபா யோகத்தில் பிறந்த ஒருவர் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் உடையவராகவும், நோய்நொடியற்றும், உணர்வுகளைக் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதுடன், பெரும் புகழுடனும் அனைத்து மகிழ்வுகளைபும் அனுபவிப்பவராகவும், தூய ஆடைகளை அணிபவராகவும் வருத்தமில்லாதவராகவும் இருப்பார்.
6. துருதுர யோகத்தில் பிறந்த ஒருவர் அனைத்து வித மகிழ்வுகளையும் அனுபவிப்பவராகவும், சொத்துக்களும் வாகனங்களும் வைத்திருப்பதுடன் உதவி செய்வதில் தாராளமாகவும் நல்ல வேலையாட்களையும் கொண்டிருப்பார்.\
கேமதுரும யோகத்தில் பிறந்த ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும், அழுக்காகவும், உணர்ச்சிகளுக்கு அடிபணிந்தும், அவரது தகுதிக்கு உட்படாத வேலைகளை செய்பவராகவும், ஏழையாகவும், மற்றவர்களின் கீழ் பணிபுரிபவராகவும் தீய நடத்தை உடையவராகவும் இருப்பார்.
…….. சந்திரனின் யோகங்கள் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment