Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, March 9, 2017

சனியின் பார்வையால் சன்னியாசி யோகம் -பிருகத் ஜாதகா – 121


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினைந்து

துறவறம் (சன்னியாசி) யோகங்கள்



2. மிகவும் வலிமை வாய்ந்த யோகக் கோளானது அஸ்தங்கம் அடைந்திருந்தால்(1) அந்த சாதகர்  தீக்ஷிதர்(2) ஆக முடியாது, ஆனால் அவ்வாறான ஒருவரிடம் இணைந்திருப்பார். மேலும், வலிமை மிகுந்த கோள், கோள்களின் யுத்தத்தில் தோல்வி அடைந்திருந்து பிறக் கோள்களால் பார்க்கப்பட்டிருந்தால்(3) அவர் தீக்ஷிதர் ஆகமாட்டார், ஆனால் அவ்வாறு ஆவதற்கு மிகவும் விருப்பம் கொண்டிருப்பார்.


குறிப்புகள்:

(1)    இது ஏற்கனவே பகுதி-7, பத்தி-2ல் உள்ள குறிப்பில் விளக்கப்பட்டிருக்கிறது.

(2)    அதாவது, ஒருவகையான மனிதனின் ஆன்மீக உயர்வு நிலை

(3)    பார்க்கப்படாமல் இருந்தால், அவர் அவ்வாறு ஆகி, பின்னர் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவார், முன்பத்தியில் கூறியவாறு.


குறிப்பு: பத்தி 1, 2 ஆகிய இரண்டினையும் ஒன்றுசேர படிக்க வேண்டும்.



3. சந்திரன் இருக்கும் இராசியின் அதிபதி சனியால் பார்க்கப்பட்டு, பிறக்கோள்களால் பார்க்கப்படாமல் இருந்தால்(1), அல்லது சந்திரன் இருக்கும் இராசியின் அதிபதி வலிமையற்று(3) இருக்கும் நிலையில் சனியால்(2) பார்க்கப்படுமானால், அவர் சன்னியாசி ஆவார். மேலும், சனியின் திரேக்கானத்தில் சந்திரன் இருக்க, சனி அல்லது செவ்வாயின் நவாம்சம் சனியால்(4) பார்க்கப்படுமானால், அந்த மனிதர் சன்னியாசி ஆவார்(5).


குறிப்புகள்:

(1)    சன்னியாச வகையானது, சனி அல்லது அதற்குரிய கோளிற்கு ஏற்ப இருக்கும்.

(2)    உரையாசிரியரின் கருத்துப்படிவலிமையாக இருக்கும்போது

(3)    சனிக்கு உரிய சன்னியாச வகை

(4)    மேலும் மற்றக் கோள்களால் பார்க்கப்படாமல் இருக்கும்போது

(5)    சன்னியாச வாழ்க்கையானது சனிக்கு உரிய வகையாக இருக்கும்


துறவறம் (சன்னியாசி) யோகம்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: