வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினான்கு
இரட்டைக் கோள்களின் யோகங்கள்
1. பிறக்கும் பொழுது, சூரியனும் சந்திரனும் இராசியில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் தீயணைப்பு வாகனம் தயாரிப்பவராகவும்(1) கற்பாறைகளில் வேலை செய்பவராகவும் இருப்பர்; சூரியனும் செவ்வாயும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் பாவத் தொழிலுக்கு அடிமையாக இருப்பார்; சூரியனும் புதனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் வேலையில் திறமையானவராகவும், புத்திக் கூர்மையாளராகவும், புகழ்மிக்கவராகவும் இருப்பதுடன் வசதியாகவும் வாழ்வார்; சூரியனும் வியாழனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கொடுமனம் கொண்டவராகவும் பிறருக்காக உழைப்பவராகவும் இருப்பார்; சூரியனும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் பொது விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலமும் ஆயுதங்களைக் கையாளுவதன் மூலமும் பணம் ஈட்டுவார்; சூரியனும் சனியும் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தால் அந்த மனிதர் உலோகத்தொழிலிலும் மண்பொருட்கள் செய்வதிலும் திறமையானவராக இருப்பார்.
குறிப்புகள்:
(1) உரையாசிரியரின் கருத்துப்படி எந்திரங்களை அழிப்பவராக இருப்பார்.
2. பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக சந்திரனும் செவ்வாயும் ஒன்றாக இருந்தால் கலை வேலைப்பாடு, பெண்கள், மதுவகைகள், பானைகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் பணம் ஈட்டுவதுடன், தாய்க்கு தொல்லைகள் கொடுப்பார்; சந்திரனும் புதனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் இனிமையாக பேசுபவராகவும், இலக்கிய ஆய்வில் அறிவார்ந்தவராகவும், அனைவராலும் அறியப்பட்டவராகவும் புகழ்மிக்கவராகவும் இருப்பார்; சந்திரனும் வியாழனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் எதிரிக்ளை வெல்பவராகவும், அவரது வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மனிதராகவும், விடாப்பிடி கொள்கை இல்லாதவராகவும், மிகவும் வசதி படைத்தவராகவும் இருப்பார்; சந்திரனும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஆடைத் தொழிலில்(1) திறமையானவராக இருப்பர்; சந்திரனும் சனியும் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தால் அந்த மனிதர் மறுமனம் புரிந்த ஒரு பெண்ணிற்கு(2) மகனாக இருப்பார்.
குறிப்புகள்:
(1)
ஆடைகளை நெய்தல், தைத்தல், சாயமிடுதல், வாங்குதல், விற்பனை செய்தல் போன்றவை.
(2)
சமஸ்கிருத வார்த்தையில் பெண் என்பதற்கு ‘புனர்பூ” என்பர். அத்தகைய பெண் உடலுறவு ஆசைகளின் காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்று, அவரது சாதியைச் சேர்ந்த வேறு ஒருவரை மணந்து அவருடன் உறவு கொண்டோ அன்றியோ அவருடன் வாழ்வார்.
இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment