வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பாகம்-2
பகுதி - பதினாறு
நட்சத்திரங்கள் (அ) நட்சத்திரங்களில் சந்திரன்
1. அசுவனி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் ஆபரணங்களின் மீது ஆசை கொண்டவராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், அனைவருக்கும் அறிமுகமானவராகவும், வேலையில் திறமையானவராகவும், அறிவாளியாகவும் இருப்பார்.
பரணி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் வேலையில் வெற்றிபெறுபவராகவும், நேர்மையானவராகவும், நோய்நொடியற்றவராகவும், துயரங்களைக் கடந்தவராகவும், திறன் மிக்கவராகவும் இருப்பார்.
2. கார்த்திகை நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் பெருந்தீனி உண்பவராகவும், பிறர் மனைவியின் மீது இச்சைக் கொண்டவராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், பரவலாக புகழப்படுபவராகவும் இருப்பார்.
ரோகிணி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் நேர்மையானவராகவும், பிறரின் சொத்துக்களை அபகரிக்காதவராகவும், நல்ல பழக்கவழக்கங்கள் உடையவராகவும், இனிய பேச்சினைக் கொண்டவராகவும், உறுதிமிக்கவராகவும், நல்ல தோற்றம் உடையவராகவும் இருப்பார்.
3. மிருகசீரிசம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் கொள்கையில் உறுதியற்றவராகவும், செயல்திறன் உடையவராகவும், பயமிக்கவராகவும், நன்கு பேசுபராகவும், சுறுசுறுப்பான பழக்கங்களைக் கொண்டவராகவும், வசதி மிக்கவராகவும், காமசெயல்களில் ஈடுபடுபவராகவும் இருப்பார்.
திருவாதிரை நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் ஒழுங்கீனமானவராகவும், கோபக்காரராகவும், நன்றிகெட்டவராகவும், துன்புறுத்தலில் ஆர்வம் உடையவராகவும், கொடூர செயல்களைச் செய்பவராகவும் இருப்பார்.
நட்சத்திரங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment