வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினாறு
நட்சத்திரங்கள் (அ) நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி
7. உத்திரம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் அனைவராலும் விரும்பப்படுபவராகவும், தாம் கற்ற கல்வியின் பயனாய் பணம் ஈட்டுபவராகவும், வசதியான வாழ்க்கை உடையவராகவும் இருப்பார்.
அஸ்தம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் சுறுசுறுப்பானவராகவும், வளமையானவராகவும், வெட்கமற்றவராகவும், கருணை யில்லாதவராகவும், திருடனாகவும், குடிகாரனாகவும் இருப்பார்.
8. சித்திரை நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் வண்ண ஆடைகள் அணிபவராகவும், பூக்களை விரும்பவராகவும், அழகிய கண்களையும் முழங்கைகளையும் கொண்டிருப்பார்.
சுவாதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் மென்மையான, அமைதியான குணம் உடையவராகவும், ஆசைகளை அடக்கிக் கொள்பவராகவும், வியாபாரத்தில் திறமையானவராகவும், கருணையுள்ளவராகவும், இனிமையான பேச்சினையும்(1), அறச் செயல்களில் ஈடுபடுபவராகவும் இருப்பார்.
குறிப்பு: (1) பிறரின் கருத்துப்படி, தாகத்தினை அடக்கமுடியாதவராகவும் இருப்பார்.
9. விசாகம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் பிறரின் புகழைக் கண்டு பொறாமை கொள்பவராகவும், கருமியாகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், தனித்துவமான பேச்சாற்றல் கொண்டவராகவும், (1)பணம் சம்பாதித்தலில் திறமையானவராகவும், பிறரின் சண்டைச் சச்சரவுகளைத் தீர்ப்பவராகவும் இருப்பார்.
குறிப்பு: (1) பிறரின் கருத்துப்படி.
அனுசம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் செல்வந்தராகவும், வெளிநாட்டில் வாழ்பவராகவும், பசியைத் தாங்கமுடியாதவராகவும், இடம் விட்டு இடம் அலைபவராகவும் இருப்பார்.
நட்சத்திரங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment