வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….
11. கும்ப இராசியில்
சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் ஒட்டகத்தினைப் போன்று கழுத்தும், திரண்ட சதையுடன்
கூடிய உடலும், உறுதியான முழுமையாக பரவிய நிலையில் முடியும் கொண்டிருப்பார்; உயரமாக
இருப்பார்; நீண்டவடிவிலான பாதம், தொடைகள், பின்புறம், முகம், அடிவயிறு கொண்டிருப்பார்;
செவிடாக இருப்பார்; பிறரின் சொத்தினையும் மனைவிகளையும் அனுபவிப்பதுடன், தீய செயல்களிலும்
ஈடுபடுவார்; மேலே எழுவதும் வீழ்வதுமாக இருப்பார்; மலர்களின் மீதும் வாசனைப் பொருட்கள்
மீதும் ஆர்வம் கொண்டிருப்பார்; நண்பர்களுடன் இணைந்திருப்பதுடன், சோர்வடையாமல் நடப்பார்.
12. மீன இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர்
கடல் வணிகம் செய்பவராகவும், பிறரின் சொத்தினை அனுபவிப்பவராகவும் இருப்பார்; மனையின்
மீதும் உடைகளிலும் மிக்க ஈடுபாடு கொண்டிருப்பதுடன், ஒழுங்கான உடல் உறுப்புகள், வெளிர்
நிற உடலமைப்பு, நீண்ட மூக்கு, பெரிய தலை கொண்டிருப்பதுடன், எதிரியை வீழ்த்துபவராகவும்
இருப்பார்; பெண்களின் செல்வாக்கிற்கு அடிபணிபவராகவும், அழகிய கண்களும், அழகாகவும் இருப்பார்;
புதையல்களை அனுபவிப்பவராக இருப்பார்; வசதியானவராகவும், கற்றறிந்தவராகவும் இருப்பார்.
13. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன் மற்றும்
சந்திரன் இருக்கும் இராசி, அந்த இராசியின் அதிபதி ஆகியோர் வலிமையுடன் இருந்தால், இந்த
பகுதியில் கூறப்பட்ட பலன்கள் முற்றிலும் பொருந்தும்(1), இதே குறிப்புகள் சந்திரனைத்
தவிர மற்ற கோள்களுக்கும் பொருந்தும்(2).
குறிப்புகள்:
(1) மூன்றில்
இரண்டு வலிமையுள்ளதாக இருந்தால், பலனானது முழுமையாக பொருந்தாது; மூன்றில் ஒன்று மட்டுமே
வலிமையாக இருந்தால், பலனானது பெருமளவு பொருந்தாது, மூன்றில் எதுவுமே வலிமையாக இல்லையெனில்,
பலன் வலிமையற்று போகும்.
(2) இது அடுத்த
பகுதியில், ஒருவர் பிறக்கும்போது பல்வேறு இராசிகளில் இருக்கும் பல்வேறு கோள்களின் பலன்கள்
பற்றி ஆசிரியர் குறிப்பிடுவதாகும்.
பகுதி-17
முற்றும்
அடுத்து..பகுதி-18
– சூரியன், செவ்வாய் மற்றும் இதர கோள்களின் பலன்கள்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment