வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினாறு
நட்சத்திரங்கள் (அ) நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி
10. கேட்டை நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் குறைந்த அளவிலான நண்பர்களைக் கொண்டவராகவும், மகிழ்ச்சியான மனநிலை உடையவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், எளிதில் கோபப்படுபவராகவும் இருப்பார்.
மூலம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் செருக்கு மிகுந்தவராகவும், வசதியானவராகவும், மகிழ்ச்சியானவராகவும், பிறரைக் காயப்படுத்தாதவராகவும், கொள்கையில் உறுதியானவராகவும், ஆடம்பரமாக வாழ்பவராகவும் இருப்பார்.
11. பூராடம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவருக்கு கனிவான மனைவி அமைவதுடன், பெருமைக்குரியவராகவும், நண்பர்களுடன் இணக்கமாகவும் இருப்பார்.
உத்திராடம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் பணிவுடனும், நல்லொழுக்க விதிகளைக் கடைபிடிப்பவராகவும், நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பவராகவும், பெருமைக்குரியவராகவும், நல்வாய்ப்புகளை பெருபவராகவும், பொதுவாக விரும்பப்படுபவராகவும் இருப்பார்.
12. திருவோணம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் கற்றறிந்தவராகவும், வளமானவராகவும், உதவும் குணம் கொண்ட மனைவியும், செல்வந்தராகவும், பரந்த புகழ்பெற்றவராகவும் இருப்பார்.
அவிட்டம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் உதவி செய்வதில் தாராளமாகவும், செல்வந்தராகவும், வீரம் மிக்கவராகவும், இசையில் ஆர்வம் உடையவராகவும், கருமியாகவும் இருப்பார்.
நட்சத்திரங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment