வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினாறு
நட்சத்திரங்கள் (அ) நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி
4. புனர்பூசம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் ஆன்மீகமும் அமைதியும் கொண்டவராகவும், வசதியுடன் வாழ்பவராகவும், நல்ல பழக்கங்கள் கொண்டவராகவும், எதிர்கருத்துக்கள் கொண்டவராகவும், நோய்வாய்பட்டவராகவும், தாகமுடையவராகவும், அற்ப செயல்களில் திருப்தி அடைபவராகவும் இருப்பார்.
5. பூசம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் தமது விருப்பங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவராகவும், அனைவராலும் விரும்பப் படுபவராகவும், சாத்திரங்களைக் கற்றறிந்தவராகவும், வசதி மிக்கவராகவும், தரும காரியங்களில் ஆர்வம் மிக்கவராகவும் இருப்பார்.
ஆயில்யம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் பிறர்வேலைகளில் ஈடுபடாதவராகவும், வரைமுறையற்று உண்பவராகவும், பாவியாகவும், நன்றி மறந்தவராகவும், பிறரை ஏமாற்றுவதில் திறமையானவராகவும் இருப்பார்.
6. மகம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் நிறைய வேலையாட்களைக் கொண்டிருப்பதுடன், பெரும் பணக்காரராகவும், வசதியான வாழ்க்கையும், தேவர்களையும் முதியவர்களையும் வணங்குபவராகவும் இருப்பதுடன் மிக முக்கிய வேலைகளைச் செய்யக்கூடியவராகவும் இருப்பார்.
பூரம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் இனிமையான பேச்சினையும், கொடையளிப்பதில் தாராளமாகவும், நல்ல தோற்றம் உடையவராகவும், பயணங்களை மேற்கொள்பவராகவும், அரசரின் கீழ் பணிபுரிபவராகவும் இருப்பார்.
நட்சத்திரங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
1 comment:
நன்றி
Post a Comment