வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….
7. துலாம் இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர்
தேவர்கள், இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தேவர்கள், அந்தனர்கள், சன்னியாசிகள்
ஆகியோருக்கு மரியாதை செலுத்துவார்; அறிவாளியாகவும்(1), பிறரின் சொத்துக்களுக்கு ஆசைப்படாதவராகவும்
இருப்பார்; சாத்திரங்களை கற்றறிவார்; பெண்களின் பேச்சினைக் கேட்டு நடப்பார்; உயரமாக
இருப்பார்; புடைத்த நாசியுடன் இருப்பார்; மெல்லிய, பாதிக்கப்பட்ட உடலுறுப்பினைக் கொண்டிருப்பார்;
பயணத்தில் ஆர்வம் கொண்டிருப்பார்; செல்வந்தராக இருப்பார்; வணிகராக இருப்பார்; கற்றறிந்த
அறிஞர்களால் தேவர்களின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுவார்; நோய்வாய் பட்டிருப்பார்;
தனது குடும்பத்தினைக் காப்பவராகவும், தனது உறவினர்களால் விரும்பப்படாதவராகவும், ஒதுக்கி
வைக்கப்பட்டவராகவும் இருப்பார்.
குறிப்பு:
(1) சமஸ்கிருத வார்த்தையான ப்ரக்னா என்பது ஒரு மனிதன் மாபெரும் அறிவாளியாக இருப்பதுடன்,
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த நிகழ்வுகளை அறிந்திருத்தல் என்பதாகும்.
8.
விருச்சிக இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த
ஒருவர் அகன்ற விழிகளையும், பரந்த மார்பினையும், வட்டவடிவமான முழங்கால்கள், தொடைகள்,
மூட்டுக்களைக் கொண்டிருப்பார்; தனது பெற்றோர் மற்றும் மூத்தோர்களை விட்டு விலகியிருப்பார்;
சிறுவயதிலேயே நோய்வாய் பட்டிருப்பார்; அரச குடும்பத்தினால் மதிக்கப்படுவார்; பழுப்பு
நிறமாய் இருப்பார்; நேரிடையான கருத்துக் கொண்டிருக்க மாட்டார்; மீன் வடிவம் அல்லது
வஜ்ராயுத வடிவம் அல்லது பறவை வடிவமான கோடுகளைக்
கையிலும் பாதத்திலும் கொண்டிருப்பார்; தான்
செய்த பாவங்களை மறைக்கும் திறன் கொண்டிருப்பார்.
இராசிகளில் சந்திரன் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment