வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள்
1. மேச இராசியில் சூரியன் இருக்க, ஆனால் அது உச்ச பாகையில்(1) இல்லாத நிலையில் பிறந்த ஒருவர், பரந்த புகழ் உடையவராகவும், அலைந்து திரியும் பழக்கம் கொண்டவராகவும், சிறிதளவு சொத்து உடையவராகவும் ஆயுதங்கள் வைத்திருப்பவராகவும் இருப்பார்.
ரிசப இராசியில் சூரியன் இருக்க பிறந்தவர் ஆடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் பிறபொருட்கள் வணிகம் செய்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவும், இசையில், வாய்பாட்டு மற்றும் இசைக்கருவிகளில் திறமை உடையவராகவும் இருப்பார்.
குறிப்பு: (1) சூரியன் உச்ச பாகையில் இருக்கும்போது பிறந்தவர் பெரும் செல்வந்தராகவும், ஒரே இடத்தில் எப்போதும் வசிப்பவராகவும், ஆயுதம் சுமக்கும் வேலையாட்களைக் கொண்டவராகவும், பெரும் புகழ்பெற்றவராகவும் திறமையானவராகவும் இருப்பார்.
2. மிதுன இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர், இலக்கணம் அறிந்தவராகவும், சோதிடராகவும், செல்வந்தராகவும் இருப்பார்.
கடக இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர், தன்னிச்சையானவராகவும் கடுமையானவராகவும், ஏழையாகவும், பிறருக்காக வேலை செய்பவராகவும், நடைபயணம் மேற்கொள்வதால் சோர்வு அடைபவராகவும் இருப்பார்.
சிம்ம இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர், காடுகளில், மலைகளில், பசுக் கொட்டில்களில் வசிப்பதில் ஆர்வம் உடையவராகவும், வலிமைமிக்கவராகவும், முட்டாளாகவும் இருப்பார்.
கன்னி இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் எழுத்தாற்றலில், ஓவியங்களில், இலக்கியம் படைப்பதில், கணிதத்தில் உலக அறிவாற்றலில் திறமை மிக்கவராகவும் இருப்பதுடன், பெண்களைப் போன்ற உடலமைப்பு கொண்டவராக இருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment