Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, August 22, 2017

செவ்வாய், சுக்கிரன், புதனின் இராசியில் பிறந்த பெண்கள் - பிருகத் ஜாதகா – 181


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்


3.     ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ மேசம் அல்லது விருச்சிகமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கு திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் திருமணத்திற்கு  முன்பே தவறியவராக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் உடலினை விற்று வாழ்வார். அது குருவாக இருந்தால் அவர் கற்புநெறி உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் ஏமாற்றுக்காரராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் தீய குணங்கள் கொண்டவராக இருப்பார்.


4.     ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ ரிசபமாக அல்லது துலாமாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் தீய குணம் கொண்டவராக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் மறுமணம் செய்துகொள்வார், அது குருவாக இருந்தால் அவர் நற்குணங்கள் உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் அவர் இசை நாட்டியத்தில் திறமையானவராக இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் அனைத்து நற்குணங்களும் கொண்டவராக இருப்பதுடன், புகழ் பெற்றவராகவும் இருப்பார். மேலும் ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியோ அல்லது சந்திரன் இருக்கும் இராசியோ மிதுனம் அல்லது கன்னியாக இருக்க, உதய திரிம்சாம்சம் அல்லது சந்திரன் இருக்கும் திரிம்சாம்சமானது செவ்வாய்க்கு உரியதாக இருந்தால், அவர் வஞ்சகியாக இருப்பார்; அது சனியாக இருந்தால் அவர் அலித்தன்மை கொண்டவராக இருப்பார், அது குருவாக இருந்தால் அவர் கற்புநெறி உடையவராக இருப்பார். அது புதனாக இருந்தால் அவர் நிறைய நற்குணங்கள் கொண்டவரால இருப்பார்; அது சுக்கிரனாக இருந்தால் அவர் காம இச்சையற்றவராக உறவுகொள்வார்.


….பெண்களின் சாதகம்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: