Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, August 26, 2017

7-ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள் - பிருகத் ஜாதகா – 185



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

பெண்களின் சாதகம்

11.    ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், 7வது வீடு அல்லது 7வது நவாம்சமானது சனியாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் வயதானவராக இருப்பதுடன் முட்டாளாகவும் இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது செவ்வாயினுடையதாக இருந்தால், அவரின் கணவர் முன்கோபியாக இருப்பார், ஆனால் தனது மனைவியின் மீது அன்புடன் இருப்பார். அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது சுக்கிரனுடையதாக இருந்தால், அவரது கணவர் அழகானவராகவும் மனைவியின் மீது அதீத அன்பு கொண்டவராகவும் இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது புதனாக இருந்தால், அவரது கணவர் கற்றறிந்தவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்.

குறிப்பு:
(1)  இந்த பத்தி மற்றும் அடுத்து வரும் பத்தியின் குறிப்பிட்டிருப்பதானது, 7வது வீடு எவ்வித கோள்களும் இன்றி இருக்க வேண்டும், என உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

12.    ஒரு பெண் பிறக்கும்போது 7வது வீடு அல்லது 7வது நவாம்சமானது சந்திரனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் அதிக காம இச்சை உடையவராகவும் இயல்பான குணம் உடையவராகவும் இருப்பார். அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது வியாழனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் தைரியமும் நற்குணமும் கொண்டவராகவும் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் அடக்கி ஆள்பவராக இருப்பார்; அத்தகைய வீடு அல்லது நவாம்சமானது சூரியனுடையதாக இருந்தால், அந்த பெண்ணின் கணவர் மென்மையானவராகவும் பல்வேறு தொழில்கள் செய்பவராகவும் இருப்பார்(1).


குறிப்பு:
(1)  வேறு சிலரின் கருத்துப்படி, இந்த பகுதியில் உள்ள வார்த்தையானது, அதிகர்மா என்பதற்கு பதிலாக ரதிகர்மா என இருக்கவேண்டும் என கூறுகின்றனர், அதன்படி, அவர் அதிக உறவு கொள்பவராக இருப்பார். மேலும், 7வது வீடானது ஒரு கோளின் வீடாகவும், 7வது நவாம்சமானது வேறொரு கோளின் வீடாகவும் இருந்தால், பலனானது, 7வது வீடு அல்லது 7வது நவாம்சத்தின் கோள்களில் எது பலமிக்கதோ அதைச் சார்ந்தே இருக்கும்.


….பெண்களின் சாதகம்.. தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: