வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்
நபாச யோகக் கணக்கீடு
1. ஒன்பது, பத்து, எட்டு ஆகியவற்றை முறையே, மூன்று, மூன்று, நான்கு ஆகியவற்றால் பெருக்கக் கிடைக்கும் எண்ணிக்கையின் முதல் இரண்டு, முதல் மூன்று, மற்றும் அனைத்து நான்கு தொகுப்புகளும் கொடுப்பது நபாச யோகங்கள் ஆகும்(1). அத்தகைய ஆயிரத்து எண்ணூறு யோகங்களை யவணர் குறிப்பிடுகிறார்(2). அவற்றை நாம் இங்கு சுருக்கமாகக் காண்போம்.
குறிப்புகள்:
(1) ஆசிரியரானவர், சுற்றுவழிக் கணக்கினை மேற்கொண்டு, பல்வேறு நபாச யோகங்களின் வகைகளைத் தொகுக்கிறார். அவரது கூற்றானது இயல்கணிதம்(அல்ஜிபிரா) வகையினைச் சேர்ந்தது: இம்முறைப்படி, 4 எண்களைக் கண்டுபிடிப்பதானது, 1வது + 2வது = 9 x 3 = 27. 1வது+2வது+3வது = 10 x 3 = 30. 1வது + 2வது + 3வது + 4வது = 8 x 4 = 32. இதன்படி, கடைசித் தொகுப்பின் எண்ணானது = 32 – 30 = 2. மூன்றாவது தொகுப்பின் எண்ணானது = 30 – 27 = 3. முதல் மற்றும் இராண்டாவது தொகுப்பின் எண்ணானது 27 ஆகும். உரையாசிரியரின் கருத்துப்படி, முதல் தொகுப்பானது 20 யோகங்களையயும் இரண்டாவது 7 யோகங்களையும் கொண்டிருக்கும். அதாவது, ஆசிரியர் சுருக்கமாகக் கூற விரும்புவதாவது – நபாச யோகங்களானது கீழ்வரும் 4 தொகுப்புகளைக் கொண்டது:
அக்ரிதி யோகங்கள் 20; சங்க்ய யோகங்கள் 7; அஸ்ரய யோகங்கள் 3; தல யோகங்கள் 2.
(2) இப்பகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பில் 1800 நபாச யோகங்களின் விவரங்களின்படி. யவணர் 1800 எனக் கூறினாலும், சுசிதவாஜரின் கருத்துப்படி, நபாச யோகங்களின் எண்ணிக்கையிலாதவையாகும்.
(3) ஆசிரியர் கூறுவது – 20 அக்ரிதி யோகங்கள் மற்றும் 7 சங்கய யோகங்கள், யவணரின் 1800 யோகங்களை உள்ளடக்கியதாகும், மேலும் அவர் 32 யோகங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார், ஏனெனில், இதன் விளைவுகளானது , 1800 யோகங்களின் விளைவினைப் போன்றே உள்ளது.
2. சத்யாச்சாரியரின் கருத்துப்படி,
அனைத்து கோள்களும் சரம் (நகர்வு), ஸ்திரம்(நிலை) அல்லது உபயம் (பொது) ஆகிய வீட்டில்
இருந்தால்(1), அந்த யோகங்கள் முறையே – ரஜ்ஜு, முசலா மற்றும் நள யோகங்கள் ஆகும், அத்துடன்
இம்மூன்றும் அஸ்ரய யோக வகையினை உருவாக்கும். பராசரரின் கருத்துப்படி, சுபக் கோள்கள்(2)
கேந்திரத்தில்(3) இருந்தால், அந்த யோகமானது ஸ்ரிக் அல்லது மாலா யோகம் எனப்படும்; அவை
அசுபக் கோள்களாக(4) இருந்து, கேந்திரத்தில்(5) இருந்தால் அந்த யோகமானது சர்ப்ப யோகம்
எனப்படும். இந்த இரண்டும் தல யோகத்தினை உருவாக்கும்.
குறிப்புகள்:
இந்த
பத்தியில் ஆசிரியர் மூன்று அஸ்ரய யோகங்களையும் இரண்டு தல யோகங்களையும் பற்றி குறிப்பிடுகிறார்.
(1) ஒன்று
அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு வீடுகளிலும். வேறு சிலரின் கருத்துப்படி,
கோள்கள் நான்கு வீட்டிலும் இருக்க வேண்டும். இது காரகரின் கருத்திற்கு எதிரானது.
(2) முறையே-
புதன், வியாழன், வெள்ளி – காரகரின் கருத்துப்படி
(3) காரகரின்
கருத்துப்படி மூன்று கேந்திரங்களில்; பத்ராயானாவின் கருத்துப்படி, கேந்திரங்களில் எவ்வித
அசுபக் கோள்களும் இருக்கக் கூடாது.
(4) முறையே
– சூரியன், செவ்வாய், சனி – காரகரின் கருத்துப்படி.
(5) காரகரின்
கருத்துப்படி மூன்று கேந்திரங்களில்; பத்ராயானாவின் கருத்துப்படி, கேந்திரங்களில் எவ்வித
சுபக் கோள்களும் இருக்கக் கூடாது.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment