வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
7. அனைத்து கோள்களும் இலக்கினத்திலிருந்து நான்கு வீடுகளில்(1) இருந்தால், அது யூப யோகம் எனப்படும்; அவை நான்காவது வீட்டிலிருந்து நான்கு வீடுகளில்(2) இருந்தால் அது இஷு அல்லது பாண யோகம் எனப்படும்; அவை 7வது வீட்டிலிருந்து நான்கு வீடுகளில்(3) இருந்தால் அது சக்தி யோகம் எனப்படும்; அவை 10வது வீட்டிலிருந்து நான்கு வீடுகளில்(4) இருந்தால், அது தண்ட யோகம் எனப்படும்.
குறிப்புகள்:
இந்த பத்தியில் மேலும் நான்கு அக்ரிதி யோகங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
(1)
அதாவது, இலக்கினம், 2வது, 3வது, 4வது வீடுகள்
(2)
அதாவது, 4வது, 5வது, 6வது, 7வது வீடுகள்
(3)
அதாவது 7வது, 8வது, 9வது, 10வது வீடுகள்
(4)
அதாவது, 10வது, 11வது, 12வது வீடுகள் மற்றும் இலக்கினம்.
8. முன்பு போலவே, அனைத்து கோள்களும் இலக்கினத்திலிருந்து ஏழு வீடுகளில் இருந்தால், அது நௌவ யோகம் எனப்படும்; அவை நான்காவது வீட்டிலிருந்து, ஏழு வீடுகளில்(1) இருந்தால், அது குட யோகம் எனப்படும்; அவை ஏழாவது வீட்டிலிருந்து(2) ஏழு வீடுகளில் இருந்தால், அது சத்ர யோகம் எனப்படும்; அவை 10வது வீட்டிலிருந்து(3) ஏழு வீடுகளில் இருந்தால், அது (ச்)சபா யோகம் எனப்படும். மேலும், அனைத்து கோள்களும் பணபரம் அல்லது ஆபோக்லிம வீடுகளிலிருந்து ஏழு வீடுகளில் இருந்தால், அது அர்த்த சந்திர யோகம்(5) எனப்படும்.
குறிப்புகள்:
இந்த பத்தியில் மேலும் ஐந்துவகையான அக்ரிதி யோகங்களை ஆசிரியர் வரையறை செய்கிறார்.
(1)
அதாவது 1வது, 2வது, 3வது, 4வது, 5வது, 6வது, 7வது வீடுகள்.
(2)
அதாவது 4வது வீட்டிலிருந்து 10வது வீடு வரை
(3)
அதாவது 7வது வீட்டிலிருந்து 12வது வீடு வரை மற்றும் இலக்கினம்.
(4)
அதாவது 10வது வீட்டிலிருந்து 12வது வீடு வரை மற்றும் இலக்கினத்திலிருந்து 4வது வீடுவரை.
(5)
ஆக மொத்தம் 4 பணபரம் மற்றும் 4 ஆபோக்லிமம் வீடுகள் எனவே, 8 வகையான அர்த்த சந்திர யோகங்கள் உண்டு, முறையே, அனைத்து கோள்களும் (1) 2- லிருந்து 8வது வீடுவரையில்; (2) 3 – லிருந்து 9வது வீடுவரையில்; (3) 5-லிருந்து 11வது வீடுவரையில்; (4) 6-லிருந்து 12வது வீடுவரையில்; (5) 8-லிருந்து 2வது வீடு வரையில்; (6) 9-லிருந்து 3வது வீடுவரையில்; (7) 11-லிருந்து 5வது வீடு வரையில்; (8) 12-லிருந்து 6வது வீடுவரையில்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment