வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
13. கட யோகத்தில் பிறந்த ஒருவர், சடங்குகள் நிறைவேற்றுதல், வசதியாக வாழ்தல் என்பதுடன் சொத்துக்களை அடையும் வழிகளை மேற்கொள்வார்; சகட யோகத்தில் பிறந்த ஒருவர் வண்டியோட்டி பிழைப்பார், நோயாளியாய் இருப்பார், மனைவியைச் சார்ந்து இருப்பார்; விஹாஹ யோகத்தில் பிறந்த ஒருவர் தகவல் கொண்டு செல்பவராக வாழ்வார், பயணங்களில் ஆர்வம் கொண்டிருப்பார், சச்சரவுகளில் ஈடுபடுவார்; சிரிங்கடக யோகத்தில் பிறந்த ஒருவர் வாழ்வின் கடைசியில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்(1); ஹல யோகத்தில் பிறந்த ஒருவர் நிலத்தினால் வாழ்வார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், ஐந்து அக்ரிதி யோகங்களின் பலன்களைக் கூறுகிறார்.
(1)
இந்த வரியில் வரும் சொல் “சிர சுகி”. இது சிலரால் “நீண்ட நாள் மகிழ்ச்சியுடன்” என விளக்கம் சொல்லப்படுகிறது. இந்த விளக்கமானது காரகரின் விளக்கமான கடினமான பேச்சினைக் கொண்ட மனிதன் என்பதற்கு எதிரானது.
14. வஜ்ர யோகத்தில் பிறந்த ஒருவர், வாழ்க்கையின் தொடக்கத்திலும் இறுதியிலும் மகிழ்வுடன் வாழ்வார், பொது நல விரும்பியாகவும், தைரியாமாக போராடுபவராகவும் இருப்பார். யவ யோகத்தில் பிறந்த ஒருவர் வலிமை மிக்கவராக இருப்பதுடன் வாழ்வில் இடைக்காலத்தில் மகிழ்வுடன் வாழ்வார். பத்ம (கமல) யோகத்தில் பிறந்த ஒருவர் பெரும் புகழுடனும், மகிழ்வுடனும், பல்வேறு செல்வங்களைப் பெற்று வாழ்வார். வபி யோகத்தில் பிறந்த ஒருவர், நீண்ட நாள் வசதியற்று வாழ்வதுடன், கஞ்சனாகவும் செல்வத்தை பூமியில் புதைத்தும் வைப்பார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், மேலும் நான்கு அக்ரிதி யோகங்களைக் குறிப்பிடுகிறார்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment