வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
11. இரஜ்ஜு யோகத்தில் பிறந்த ஒருவர், மற்றவரின் சொத்தின் மீது பொறாமை கொண்டவராக இருப்பார், வெளி நாடு செல்வதுடன் பயணங்களில் ஆசை கொண்டவராக இருப்பார்; முசல யோகத்தில் பிறந்த ஒருவர் மரியாதைக்கு உரியவராக, வசதி மிக்கவராகவும் இருப்பதுடன் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடப்பார்; நள யோகத்தில் பிறந்த ஒருவர், உறுப்புகளில் குறைபாடு, தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வேலையில் திறமை மிக்கவராக இருப்பார்(1). மேலும், சிரிக் யோகத்தில் பிறந்த ஒருவர் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்வார்; சர்ப்ப யோகத்தில் பிறந்த ஒருவர் பலவிதங்களில்(2) துன்பப் பட்டு வாழ்வார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், மூன்று அஸ்ரய யோகங்கள் மற்றும் இரண்டு தள யோகங்களின் பலன்களை வரையறுக்கிறார்.
(1)
சத்யாச்சாரியாரின் கருத்துப்படி
(2)
காரகரின் கருத்துப்படி
12. அஸ்ரய யோகங்கள் பங்குபெறும் அதே வேளையில் பிற யோகங்களும் இருந்தால், அவைகளில் பிந்தையதையே கவனிக்க வேண்டும், இல்லையெனில் அவைகளுக்குரிய பலன்களையே அவை வழங்கும்.
குறிப்புகள்:
இது பற்றி பத்தி 3-ல் ஏற்கனவே விவரித்து விட்டோம். எடுத்துக்காட்டாக, இரஜ்ஜு யோகம் அல்லது முசல யோகம் அல்லது நள யோகமானது பங்குபெறும் நிலையில் கமல யோகம் (பத்தி-5) இருந்தால், பிந்தையதையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment