வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
அக்ரிதி யோகங்கள்
3. பிற சோதிடர்கள் கூறும் அஸ்ரய யோகங்கள் என்பது யவா(1), அப்ஜா(2), வஜ்ரா(3), அண்டஜா(4), கோளா(5) மற்றும் அதுபோன்ற யோகங்களை(6) ஒத்ததே, மேலும் கேந்திரங்களில் கோள்கள் இருக்கும் நிலையில் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிடப்படுவதுபோலவே, தல யோகத்தின் விளைவுகளும் குறிப்பிடப்படுகின்றன, மேலும் அவை எவ்வித தனித்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை(7).
குறிப்புகள்:
இந்த பத்தியில், ஆசிரியர், அஸ்ரய மற்றும் தல யோகங்களை பிற சோதிடர்கள் கையாளுவதில் தவறு செய்கிறார்கள் என்பதனை விளக்குகிறார்.
(1), (2), (3) – பத்தி 5-ல் குறிப்பிட்டவாறு. இவை அக்ரிதி யோகங்கள் ஆகும்.
(4) பத்தி 4-ல் குறிப்பிட்டவாறு. இதுவும் அக்ரிதி யோகம் ஆகும்.
(5) பத்தி 10-ல் குறிப்பிட்டவாறு, இது சங்கய யோகங்களில் ஒன்று.
(6) இது போன்ற யோகங்கள்:), அக்ரிதி யோகத்தில் சகட யோகம் (பத்தி-4); சங்கய யோகத்தில் கேதார, சூல மற்றும் யுக யோகம் (பத்தி-10).
அஸ்ரய யோகங்கள் என்பது இவை போன்றவையாகவோ அல்லது இவை போன்றவையாக இல்லாமலோ, இருக்கக் கூடும்; எனவே, ஆசிரியர், இதனைத் தனியாக தீர்மானிக்க வேண்டும் என்கிறார். எடுத்துக்காட்டாக, அனைத்து கோள்களும் மிதுனத்திலும் தனசுவிலும் இருந்தால் – 2 உபய(பொது) இராசிகள் – இதில் ஒன்று உதய இராசியாக இருக்கும் நிலையில், அந்த யோகமானது வஜ்ர மற்றும் நள ஆகிய இரண்டு யோகங்களும் ஆகும்; ஆனால் வேறு ஏதேனும் இராசி உதய இராசியாக இருந்தால், அது வஜ்ர யோகம் ஆகாது, ஆனால் அது நள யோகம் ஆகும்.
(7) தல யோகத்தினைப் பொருத்தவரையில், பிற ஆசிரியர்கள் சுப அசுபக் கோள்கள் கேந்திரத்தில் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை வரையறை செய்கிறார்கள் மேலும் அவை இரண்டு தல யோக விளைவுகளையும் ஏற்படுத்தகையில், அவைகளை தனித்துவமாக செய்யவில்லை; ஆசிரியர் இவைகளை தனியாக வரையறை செய்து நபாச யோகமாக காண்பிக்கிறார், மேலும் அதன்படி, இதன் விளைவுகள் வாழ்க்கை முழுமையும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது (பத்தி 9-ன்படி). பிற ஆசிரியர்கள் இவைகளை பிற யோகங்களில் உட்படுத்துகின்றனர்.
4. அனைத்து கோள்களும் ஏதேனும் இரண்டு அடுத்தடுத்த கேந்திரங்களில் இருந்தால், அந்த யோகத்தின் பெயர் கத யோகம்(1). அனைத்தும் இலக்கினத்திலும் 7வது வீட்டிலும் இருந்தால், அந்த யோகத்தின் பெயர் சகட யோகம். அனைத்து கோள்களும் 4வது மற்றும் 10வது வீட்டில் இருந்தால், அது விஹாக (அந்தஜ) யோகம் எனப்படும். அனைத்து கோள்களும் இலக்கின, 5வது 9வது வீடுகளில் இருந்தால் சிரிங்கதக யோகம் எனவும், அனைத்து கோள்களும் பிற திரிகோணங்களில் இருந்தால் ஹல யோகம்(2) எனவும் அழைக்கப்படும்.
குறிப்புகள்:
ஆசிரியர் 20 அக்ரிதி யோகங்களை வரையறை செய்கிறார். இதில் ஐந்து யோகங்களை இந்த பத்தியில் வரையறை செய்கிறார்.
(1)
இது நான்கு வழிகளில் இருக்கும்: அனைத்து கோள்களும் (1) 1 மற்றும் 4வது வீட்டில்; (2) 4வது மற்றும் 7வது வீட்டில்; (3) 7வது மற்றும் 10வது வீட்டில்; (4) 10வது மற்றும் 1வது வீட்டில். யவனர் இந்த நான்கினையும் தனித்துவமான யோகங்களாகக் கருதுகிறார், அவை முறையே, கத யோகம், சங்க யோகம், விபுக யோகம், துவஜ யோகம் (இப்பகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின் படி).
(2)
இது மூன்று வழிகளில் இருக்கும்: அனைத்து கோள்களும் (1) 2வது, 6வது மற்றும் 10வது வீடுகளில் (2) 3வது, 7வது, 11வது வீடுகளில் (3) 4வது, 8வது, 12வது வீடுகளில்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment