வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
9. கோள்கள்(1) இரண்டாவது வீட்டிலிருந்து ஒன்றுவிட்ட 6 வீடுகளில்(2) இருந்தால், அது சமுத்ர யோகம் எனப்படும். அவை இலக்கினத்திலிருந்து அடுத்தடுத்த 6 வீடுகளில்(3) இருந்தால், அது சக்ர யோகம் எனப்படும். இவ்வாறு அக்ரிதி யோகங்கள் சுருக்கமாக வரையறுக்கப்படுகின்றன.
குறிப்புகள்:
இந்த பத்தியில் ஆசிரியர் மீதமுள்ள இரண்டு (மொத்தம் இருபதில்) அக்ரிதி யோகங்களை வரையறை செய்கிறார்.
(1)
அனைத்து ஏழு கோள்களும்
(2)
அதாவது, 2வது, 4வது, 6வது, 8வது, 10வது, 12வது வீடுகள்
(3)
அதாவது, 1வது, 3வது, 5வது, 7வது, 9வது, 11வது வீடுகள்
10. அனைத்து கோள்களும் ஏதேனும் ஏழு வீடுகளில் இருந்தால், அது வல்லகி யோகம் எனப்படும்; அவை ஏதேனும் ஆறு வீடுகளில் இருந்தால் அது தாமினி யோகம் எனப்படும்; அவை ஏதேனும் ஐந்து வீடுகளில் இருந்தால் அது பாச யோகம் எனப்படும்; ஏதேனும் நான்கு வீடுகளில் இருந்தால் அது கேதார யோகம் எனப்படும்; ஏதேனும் மூன்று வீடுகளில் இருந்தால் அது சூல யோகம் எனப்படும்; ஏதேனும் இரண்டு வீடுகளில் இருந்தால் அது யுக யோகம் எனப்படும்; அவை ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் அது கோல யோகம் எனப்படும். இத்தகைய ஏதேனும் சங்க்ய யோகம், அதே வேளையில் ஏதேனும் நபாச யோகமும் இருந்தால், அது பிந்தைய(1) பிரிவினைக் குறிக்கும்.
குறிப்பு:
(1)
இந்த பத்தியில், ஆசிரியர் ஏழு சங்க்ய யோகங்களை வரையறை செய்கிறார்.
எடுத்துக்காட்டாக, கட, சகட மற்றும் விஹாகங்கள் பற்றி பத்தி 4-ல் வரையறை செய்யப்பட்டவை அவ்வாறே தீர்மானிக்கப்பட வேண்டுமேயன்றி, இந்த பத்தியில் குறிப்பிடப்பட்ட யுக யோகங்களாக தீர்மானிக்க முடியாது; ஸ்ட்ரிங்கடக அல்லது ஹால யோகங்கள் என பத்தி 4-ல் வரையறை செய்யப்பட்டவை அவ்வாறே தீர்மானிக்கப்பட வேண்டுமேயன்றி, இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டவாறு சூல யோகங்களாக தீர்மானிக்கக் கூடாது. மேலும், வஜ்ர, யவ, கமல மற்றும் வாபி யோகங்கள் என பத்தி 5-ல் வரையறை செய்யப்பட்டவையும், யுப, இஷு, சக்தி, தண்ட யோகங்கள் என பத்தி 7-ல் வரையறை செய்யப்பட்டவையும் இந்த பத்தியில் கூறப்பட்ட கேதார யோகத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. அவ்வாறே மற்றவையும்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment