வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
15. யூப யோகத்தில் பிறந்த ஒருவர், தானம் வழங்குபவராகவும், உயர்ந்த தியாக மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார். பாண (இஷு) யோகத்தில் பிறந்த ஒருவர் சித்திரவதை செய்பவராகவும், சிறை அதிகாரியாகவும், அம்புகள் செய்பவராகவும் இருப்பார். சக்தி யோகத்தில் பிறந்த ஒருவர் அவமானகரமான வேலைகளை மேற்கொள்பவராக வாழ்வதுடன் திறமையற்றவராகவும், பணமற்றவராகவும் வசதிகளற்றவராக்வும் வாழ்வார். தண்ட யோகத்தில் பிறந்த ஒருவர் அவரது விருப்பத்திற்கு உரியவர்களிடமிருந்து(1) விலகியும், வாழ்வதற்கு தேவையானதை மிகவும் தாழ்நிலையில் பெற்றும்(2), அதாவது அடிமைநிலையில் வாழ்வார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், ஆசிரியர் மேலும் நான்கு அக்ரிதி யோகங்களைக் குறிப்பிடுகிறார்
(1)
மகன்கள் மற்றும் உறவினர்கள்
(2)
அதாவது சூத்திரரின் வேலை.
16. நௌவ யோகத்தில் பிறந்த ஒருவர், எப்பொழுதும் பரவலான புகழ் பெற்றவராகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுடன், கருமியாகவும் இருப்பார். குட யோகத்தில் பிறந்த ஒருவர் பொய் சொல்பவராகவும், சிறை அதிகாரியாகவும்(1) இருப்பார். சத்ர யோகத்தில் பிறந்த ஒருவர் தம் மக்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பவராகவும், வாழ்வின் கடைசியில் வசதியாகவும் வாழ்வார். சப யோகத்தில் பிறந்த ஒருவர் சண்டையிடுவதை விரும்புவராகவும், வாழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ்வார்.
குறிப்புகள்:
மேலும் நான்கு அக்ரிதி யோகங்களின் பலன்கள் இந்த பத்தியில் விளக்கப்படுகிறது.
(1)
வேறொரு நூலின்படி, அந்த மனிதர் கருமியாகவும் இருப்பார்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment