வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
8. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் தனுசுவின்(1) 5வது நவாம்சத்தில் அல்லது மீனம், கடகம், மகரம் அல்லது மேசம்(2) நவாம்சத்தில் இருக்க, அதில் சனி அல்லது செவ்வாய் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ, அத்தகைய மனிதர் தொழுநோயால்(3) பாதிக்கப்படுவார். மேலும், இலக்கினத்திலிருந்து 5வது அல்லது 9வது வீடானது விருச்சிகமாகவோ, கடகமாகவோ, ரிசபமாகவோ அல்லது மகரமாகவோ இருக்க அதில் சனி அல்லது செவ்வாய் இருக்க அல்லது பார்க்கப்பட்டால், அத்தகைய மனிதரும் தொழுநோயால் பாதிக்கப்படுவார்(4).
குறிப்பு:
(1)
அது சிம்மத்தின் நவாம்சமாக தனுசுவில் இருப்பது.
(2)
இது எந்த ஒரு இராசியின் நவாம்சமாகவும் இருக்கலாம்.
(3)
யவனாச்சாரியாரின் கருத்துப்படி, அதே நேரத்தில் சந்திரன் சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால், உடலில் ஏற்படும் சிராய்ப்புகள் மூலம் அந்த மனிதரின் உருவத்தில் ஒழுங்கின்மை ஏற்படும்.
(4)
அதாவது, உதய இராசியானது திரிகோண வீடுகளில் ஒன்றான (1) ரிசபம், கன்னி, மகரம் அல்லது (2) கடகம், விருச்சிகம் மீனம் ஆகியவற்றில் கட்டாயம் இருக்க வேண்டும்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|