வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து இரண்டு
பல்வேறு யோகங்கள்
1. கோள்கள் தமது சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் அல்லது மூலத் திரிகோணத்தில் இருப்பதுடன், அதே வேளையில் அவை இலக்கினத்திலிருந்து கேந்திரத்தில் இருந்தால், அவை ஒன்றிற்கு ஒன்று “காரக கோள்கள்” எனப்படும். மேற்கூறிய வகையில், ஒரு கோள் மற்றொரு கோளிற்கு 10வது வீட்டில் இருந்தால் அது அந்த கோளிற்கு சிறப்பு காரகர் எனப்படும்.
குறிப்பு:
இந்த பத்தி மற்றும் அடுத்து வரும் இரு பத்திகளில் காரக (உதவி) கோள்கள் பற்றி விவரிக்கப்படுகிறது.
2. இதன்படி, உதய இராசி கடகமாக இருந்து அதில் சந்திரன் இருக்க, செவ்வாய், சூரியன், வியாழன் ஆகியவை அவைகளின் உச்ச இராசியில் இருந்தால், அந்த நான்கு கோள்களும், அவை ஒன்றிற்கு ஒன்று காரகக் கோள்கள்(1). மேலும், ஒருகோள் உதய இராசியில் இருக்க, மற்றக் கோள்கள்(2) 10வது அல்லது 4வது வீடுகளில் இருந்தால் அவை காரக கோள்கள்(3) எனப்படும்.
குறிப்பு:
(1) அதாவது, வியாழன் கடகத்தில் இருக்க, அதே நேரத்தில் கடகம் இலக்கினமாக இருக்க, சனி 4வது வீட்டில் இருக்க, செவ்வாய் 7வது வீட்டில் இருக்க, சூரியன் 10வது வீட்டில் இருப்பது. உரையாசிரியர் இந்த பத்தியின் மூலம் கூறமுயல்வது, கோள்கள் தமது சொந்த வீடு, உச்ச வீடு மற்றும் மூலத்திரிகோண வீடு ஆகியவற்றில் இருப்பதுடன் அவை மற்ற கோள்களுக்கு கேந்திரத்தில் இருந்தால் அவை ஒன்றிற்கு ஒன்று காரகக் கோள்கள், அதாவது அவை இலக்கினத்திலிருந்து கேந்திரத்தில் இல்லாத நிலையிலும்.
(2) உரையாசிரியரின் கருத்துப்படி அனைத்து கோள்களும் அவை சொந்த வீடுகள், உச்ச வீடுகள் அல்லது மூலத்திரிகோண வீடுகள் ஆகியவற்றில் இருந்தாலும் இல்லையென்றாலும்.
(3) இது, மாற்றி இருந்தால் பொருந்தாது. அதாவது, இலக்கினத்தில் இருக்கும் கோள், 4வது, 10வது வீட்டில் இருக்கும் கோள்களுக்கு காரகர் கிடையாது.
3. ஒரு கோள் அதன் மூலத்திரிகோணம் அல்லது உச்ச வீட்டில்(1) இருப்பதும் அது இருக்கும் வீட்டில் இருந்து 10வது (2) வீட்டில் இருக்கும் கோளிற்கு காரகர் ஆகும், மேலும் அந்த கோள் அதற்கு அதிமித்ர கோளாக இருந்தாலும் காரகராக இருக்கும்.
குறிப்பு:
(1) ஆனால் இலக்கினத்திலிருந்து கேந்திர வீடுகளில் இருப்பது அல்ல.
(2) பின் கூறிய கோளானது, அது தனது சொந்த வீடு, மூலத் திரிகோணம் அல்லது உச்ச வீடுகளில் இருக்க வேண்டும். காரகக் கோள்களின் பலன்கள் பற்றி வராக மிகிரர் தமது யோக யாத்ரா எனும் நூலில் வரையறை செய்கிறார், அதில் ஒரு மன்னன் தனது ஆட்சியை இழந்தபின், அதனை மீண்டும், காரகக் கோளின் அந்தர திசையில் அடைவார் என்கிறார். மேலும், அதில், ஒருவர் வசதியான வாழ்க்கை, சொத்துக்கள், வெற்றி போன்றவைகளை, காரக கோள்கள் இருக்கும் வீட்டினைச் சந்திரன் கடக்கும்போது அல்லது சூரியன் இருக்கும் வீட்டிற்கு இராண்டாம் வீட்டினைக் கடக்கும்போது அடைவார். மேலும், மேற்கொள்ளும் பயணம் வெற்றியைத் தருவதுடன், அது மேலே கூறிய இரு இடங்களைச் சந்திரன் கடக்கும்போது நிகழும், இல்லையெனில் பயணதாரர் தனது வழியே சென்று கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
பல்வேறு யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
2 comments:
இந்த நூல்கள் எங்கு கிடைக்கும்.kumari1485@gmail.com அனுப்பவும்.
ஜோதிடம் நூல்கள்.
நன்றிகள்
நூலின் பெயரினைக் குறிப்பிடவும்.
Post a Comment