நீண்ட ஓய்விற்கு பின்....
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஐந்து
இறப்பு நிலை ….தொடர்கிறது
14. சூரியன் அல்லது சந்திரன் வலிமையாக
இருக்கும் திரேக்கான அதிபதியின் வீடானது வியாழனாக இருந்தால், அந்த மனிதர் தேவலோகத்தில்
இருந்து வருவார்; அத்தகைய அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனாக இருந்தால், அந்த மனிதர்
பித்ரிலோகத்திலிருந்து வருவார்; அத்தகைய அதிபதி சூரியன் அல்லது செவ்வாய் எனில், அந்த
மனிதர் கீழ்நிலை விலங்கின் உலகத்திலிருந்துவருவார்; அத்தகைய அதிபதி சனி அல்லது புதனாக
இருந்தால், அந்த மனிதர், நரகத்திலிருந்து வருவார்.
சூரியன்
அல்லது சந்திரன் இவற்றில் வலிமையாக இருக்கும் திரேக்கானத்தின் அதிபதி, அதன் உச்ச வீட்டில்
இருந்தால், அத்தகைய மனிதனின் குணாதிசயமானது உயர்தரமானதாக இருக்கும்; அத்தகைய அதிபதி,
உச்ச வீட்டிற்கும் நீச்ச வீட்டிற்கும் இடையில் இருந்தால், அவருடைய கடைசிகாலமானது மத்திமமாக
இருக்கும்; அத்தகைய அதிபதி நீச்ச வீட்டில் இருந்தால் கீழான குணம் கொண்டவராக இருக்கும்.
15. 6வது வீடும் 8வது வீடும் கோள்கள் இன்றி இருந்தால்,
அந்த மனிதர், இறப்பிற்கு பிறகு, 6வது, 8வது வீட்டின் திரேக்கான அதிபதிகளில் வலிமை வாய்ந்த
கோளின் உலகத்திற்கு செல்வார்(1); அல்லது 6வது, 7வது, 8வது வீட்டில் இருக்கும் கோளின்
உலகத்திற்கு செல்வார்(2); மேலும், வியாழனானது 6வது அல்லது ஏதேனும் கேந்திர வீட்டில்
அல்லது 8வது வீட்டில் இருக்க அதே வேளையில் அது அதன் உச்ச வீடாக இருந்தால் அல்லது உதய
இராசி மீனமாகவும் அதில் வியாழனும் இருப்பதுடன், அது சுபக் கோளின் நவாம்சமாகவும் இருக்க,
மற்ற கோள்கள் வலிமை குன்றியும் இருந்தால், அந்த மனிதர் இறப்பிற்கு பிறகு பாவ மன்னிப்பு
பெறுவார்(3).
குறிப்பு:
(1) கடைசி
பத்தியில் கூறப்பட்டவாறு, பல்வேறு கோள்களின் உலகங்கள்.
(2) இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் 6வது, 7வது, 8வது வீடுகளில் இருந்தால், அந்த மனிதர்
அக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளின் உலகத்திற்கு செல்வார்.
(3) இறக்கும்போது
கோள்கள் இருக்கும் நிலையினைப் பொருத்து, அடுத்த பிறவியில் எந்த உலகிற்கு செல்வார் என்பதைத்
தீர்மானிக்க முடியும்.
இறப்பு
நிலை முடிவுற்றது
அடுத்து
… பகுதி – 26 – சாதகம் இல்லாதவர்களுக்கு
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment