வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
9. கேள்வி
கேட்கும் நேரத்தில் உதய இராசியானது ரிசபம் அல்லது சிம்மாக இருந்தால், லக்கின ஸ்புடத்தினை
(இலக்கினத்தின் தீர்க்க ரேகையால்) 10-ஆல் பெருக்க வேண்டும்; அது மிதுனம் அல்லது விருச்சிகமாக
இருந்தால், ஸ்புடத்தினை 8-ஆல் பெருக்க வேண்டும்; மேசம் அல்லது துலாமாக இருந்தால்,
7-ஆல் பெருக்க வேண்டும்; கன்னி அல்லது மகரமாக இருந்தால், 5-ஆல் பெருக்க வேண்டும், மீதி
உள்ள கோள்கள் என்றால், அந்த கோள்கள் மேசத்திலிருந்து உள்ள எண்ணிக்கையால் பெருக்க வேண்டும்
(1). மேலும், உதய இராசியில் இருக்கும் கோள் வியாழன் என்றால், இலக்கின ஸ்புடத்தினை
10-ஆல் பெருக்க வேண்டும்; அது செவ்வாயாக இருந்தால் 8-ஆல், சுக்கிரனாக இருந்தால் 7-ஆல்,
பிற கோள்களாக இருந்தால் 5-ஆலும் பெருக்க வேண்டும். உதய இராசியில் நிறைய கோள்கள் இருந்தால்,
இலக்கின ஸ்புடத்தினை அத்தகைய கோள்களின் காரணியால் பெருக்க வேண்டும். அவ்வாறாக பெருக்கிவரும்
அனைத்து மதிப்பினையும் கூட்டி, அதன் விடையினைக் கணக்கிடவும்(2).
குறிப்புகள்:
ஆசிரியர்
இந்த பத்தியிலும் இதற்கு அடுத்த பத்தியிலும் கேள்வி கேட்பவர், அவரின் மனைவி, சகோதரர்,
மகன், எதிரி ஆகியோரின் நட்சத்திரத்தினைக் கண்டுபிடிக்கும் முறையினை (சந்திரன் இருக்கும்
நட்சத்திரம்) விளக்குகிறார். இந்த உரையில் தெரிவிக்கப்படும் எண்களானது இராசி குணகரம்
கிரக குணகரம் – அதாவது இராசி மண்டலம் மற்றும் கோள்களின் காரணிகள் என அஷ்டவர்க்க பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் குறிக்கிறது.
(1) எடுத்துக்காட்டாக,
கடக இராசியாக இருந்தால், மேசத்திலிருந்து 4வது வீடு, கடகத்தின் காரணி 4. தனுசுவின்
காரணி 9, கும்பத்தின் காரணி 11, மீனத்தின் காரணி 12.
(2) இலக்கின
ஸ்புடம் 5” 100 20’ எனவும், மேலும் வியாழனும் சுக்கிரனும் உதயத்தில் இருப்பதாகக்
கொள்வோம். இதன்படி, இலக்கின ஸ்புடத்திலிருந்து, கிடைக்கப்பெறும் உதய இராசி கன்னியாகும்.
கன்னியின் காரணி 5. இதனை 5” 100
20’ –ஆல் பெருக்க, நமக்குக் கிடைப்பது 26” 210 40’. இதனை 12-ஆல் வகுக்க,
நமக்குக் கிடைக்கும் மீதியானது 2” 210 20’(R.). மேலும், வியாழனின் காரணி
10, சுக்கிரனின் காரணி 7. இங்கு 5” 100 20’ என்பதை 10-ஆல் பெருக்க, நமக்குக்
கிடைப்பது 53” 130 20’. இதனை 12-ஆல் வகுக்க, நமக்குக் கிடைக்கும் மீதி
5” 130 20’. மேலும், 5” 100 20’ என்பதை 7-ஆல் பெருக்க, நமக்குக்
கிடைப்பது, நமக்குக் கிடைப்பது 37” 120 20’. இதனை 12-ஆல் வகுக்க நமக்குக்
கிடைப்பது 1” 120 20’. இதனை 5” 130 20’- உடன் கூட்டினால் நமக்குக்
கிடைப்பது 6” 250 40’ (G). இங்கு (R.) –உடன் (G)-ஐக் கூட்ட நமக்குக் கிடைப்பது 9” 170 20’.
நிமித்திகன்:
இந்தக்
கணித முறை தலை சுற்றுகிறது அல்லவா? 1600 ஆண்டுகளுக்கு முன்பு, வராகமிகிரர் இக்கணித
முறையினை கைவரப்பெற்றிருக்கிறார் என்றால், அதற்கும் முன்பே, வான் காணிதத்தில் நாம்
(இந்தியர்கள்) விற்பன்னர்களாக இருந்திருக்கிறோம். ஆனால் முறையான பதிவுகளும், பதிவுகளைத்
தொடர்தலும், புரிதலும் இல்லாத நிலையால் நம் மதிப்பினை நாம் இழந்து விட்டோம். பிதாகரஸை
கொண்டாடும் நாம், நம் பாட்டன்களின் திறமையை மண்ணுக்கள் புதைத்துவிட்டோம். சோதிடத்தில்
ஆன்மீகத்தைத் தவிர்த்து, அறிவியல் கணிப்புகளை மட்டும் தொன்றுதொட்டு செய்து வந்திருந்தால்,
இன்று சோதிடம் என்பது அறிவியல் கணிதம் என்பதனை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கும். வழி வகைகள்
தெரிந்திருந்தும், வழக்கொழிந்து போய்விட்டோம்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment