வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாதவர்கள்
1. ஒருவர்
தான் உருவான அல்லது பிறந்த நேரம் தெரியாதவராக இருந்தால், அவருடைய பிறந்த நேரம் என்பது,
கேள்விகளின் அடிப்படையில் பிரசன்ன இலக்கினத்தின் மூலம் கணிக்கப்பட வேண்டும்(1). உதய
இராசியின் முதல் பாதி ஓரையில் கடக்கும் எனில், பிறந்த மாதம் உத்திராயணத்தில் வரும்(2)
இரண்டாவது பாதி ஓரையில் கடக்கும் எனில், பிறந்த மாதம் தட்சினாயணத்தில் வரும்(3).
குறிப்பு:
1. கேள்வி
கேட்கும்பொழுது உள்ள உதய இலக்கினமே பிரசன்ன இலக்கினம் ஆகும்.
2. உத்திராயணம்:
மகரத்திலிருந்து மிதுனம்வரை உள்ள 6 மாதங்கள்
3. தட்சினாயனம்:
கடகத்திலிருந்து தனுசுவரை உள்ள 6 மாதங்கள்
2. கேள்வி கேட்கும் நேரத்தில் இராசியின் முதல் திரேக்கானம்
உதயமாக இருந்தால், அவர் பிறக்கும்போது வியாழன் இருக்கும் வீடானது பிரசன்ன இலக்கினமாக
இருக்கும். கேள்வி கேட்கும் நேரத்தில் இராசியின் இரண்டாவது திரேக்கானம் உதயமாக இருந்தால்,
அவர் பிறக்கும்போது வியாழன் இருக்கும் வீடானது பிரசன்ன இலக்கினத்திலிருந்து ஐந்தாவது
வீடாக இருக்கும். கேள்வி கேட்கும் நேரத்தில் இராசியின் மூன்றாவது திரேக்கானம் உதயமாக
இருந்தால், அவர் பிறக்கும்போது வியாழன் இருக்கும் வீடானது பிரசன்ன இலக்கினத்திலிருந்து
ஒன்பதாவது வீடாக இருக்கும்(1). பிறந்த வருடம்
என்ன என்பதை ஆளின் தோற்றத்தை வைத்து முடிவு செய்ய வேண்டும்(2). கேள்வி கேட்கும் நேரத்தில்
சூரியன் பிரசன்ன இலக்கனத்தில் இருந்தால் அல்லது சூரியனின் திரேக்கானம் உதயமாக இருந்தால்,
பிறந்த ரிது(ருது) என்பது (இரண்டுமாத அளவு) கிரீஷ்மா (சூரியன் மிதுனத்தினையும் கடகத்தினையும்
கடக்கும் காலம்) ஆகும். மற்ற கோள்கள் எனில், ரிது வேறாக இருக்கும்(3). இவ்வாறு தீர்மானிக்கப்படும்
ரிதுவானது, முன்பு விளக்கிய அயன ரிதுவோடு கொள்ளக்கூடாது, சரியான ரிதுவை தீர்மானிப்பது
குறித்து அடுத்த பத்தியில் விளக்கப்படும்.(4).
குறிப்பு:
1. அதாவது,
கேள்வி கேட்கும் நேரத்தில் உதய துவாதசாம்சம் ஒன்றாக இருந்தால், பிறக்கும்போது வியழன்
இருக்கும் வீடு, பிரசன்ன இலக்கினமாக இருக்கும்; உதய துவாதசாம்சம் 2-வதாக இருந்தால்,
பிறக்கும்போது வியாழன் , பிரசன்ன இலக்கினத்திலிருந்து 2வது வீட்டில் இருக்கும்.
2. வியாழனானது
இராசியை சுற்றிவருவதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்பதால், பிறந்த நேரத்திலிருந்து எத்தன
சுற்றுக்கள் கடந்திருக்கிறது என்பதைக் கொண்டு ஒருவரின் வயதைத் தீர்மானிக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, கேள்வி கேட்கும் நேரத்தில் வியாழன் விருச்சிகத்தில் இருக்கும் நிலையில்,
ரிசப இராசியானது பிறக்கும் நேரத்தில் இருப்பதாகக் கொண்டால், அவர் 4வது சுற்றில் இருக்க
வேண்டும். அந்த மனிதரின் வயதானது 3 x 12 + 6 அல்லது 42 வயது. வியாழனின் சுற்றினை– அதாவது
ஒரு தோராய மதிப்பீட்டிலிருந்து அந்த மனிதரின் தோற்றத்தினை வைத்துக் கணிக்க வேண்டும். தற்போதைய எடுத்துக்காட்டின்படி, அந்த மனிதரின் வயது
என்பது 6 அல்லது 12+6=18 அல்லது 24+6=30 அல்லது 36+6=42 என்பது போல. இருப்பினும் ஒருவரின் தோற்றத்தினைக்
கொண்டு வியாழனின் சுற்றினைக் கணிக்க முடியாது, அந்த நேரத்தில் அந்த மனிதரின் உடலைத்
தொட்டு உணர்தல் மூலம் வியாழனின் சுற்றினை அறிய முயல வேண்டும். பிருகத் சம்ஹிதா பத்தி-24,
பகுதி-70ல், மனித உடலின் பகுதிகள் 10 பாகங்களாக குறிக்கப்படுகிறது, ஒவ்வொரு பாகமும்
12 ஆண்டுகள் கொண்ட ஒரு தசா காலமாக கணக்கிடப்படுகிறது.
(1) பாதமும்
கனுக்காலும்
(2) முழங்காலும்
முட்டியும்
(3) தொடையும்
உயிர் உறுப்பும்
(4) அடிவயிறும்
தொப்பூளும்
(5) தொப்பை
(6) மார்பும்
மார்பகங்களும்
(7) தோள்கள்
(8) கழுத்தும்
உதடும்
(9) கண்களும்
புருவமும்
(10) நெற்றியும்
தலையும்
அதன்படி,
வயிற்றைத் (தொப்பையைத்) தொட்டால், கேள்வி கேட்கும் அந்த நேரத்தில் வியாழன் ஐந்தாவது
சுற்றில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அதன்படி, அந்த மனிதரின் வயது என்பது 4 x 12 அல்லது
48 ஆண்டுகள் கூட்டல் அவர் பிறந்த பொழுதிலிருந்த வீட்டிலிருந்து தற்போது கேள்வி
கேட்கும் பொழுது வியாழன் உள்ள வீடு வரை.
3. அதன்படி,
பிரசன்ன இலக்கினத்தில் சூரியன் இருந்தால் அல்லது சூரியனின் திரேக்கானம் கேள்வி கேட்கும்போது
உதயமாக இருந்தால், அது கிரீஷ்மா ரிதுவாக இருக்கும்.
கேள்வி
கேட்கும் நேரத்தில் பிரசன்ன இலக்கினத்தில் சுக்கிரன் இருந்தால் அல்லது சுக்கிரனின்
திரேக்கானம் உதயமாக இருந்தால், ரிதுவானது வசந்தமாக (சூரியன் மேசம்-ரிசபத்தினைக் கடக்கும்
காலம்) இருக்கும். அது செவ்வாயாகவும் அதன் திரேக்கானமாகவும் இருந்தால், ரிதுவானது கிரீஷ்மாவாக
(மிதுனம்-கடகம்) இருக்கும். அது சந்திரனாகவும் அதன் திரேக்கானமாகவும் இருந்தால், ரிதுவானது
வர்ஷாவாக (சிம்மம்-கன்னி) இருக்கும். அது புதனாகவும் அதன் திரேக்கானமாகவும் இருந்தால்,
ரிதுவானது சரத்தாக (துலாம்-விருச்சிகம்) இருக்கும். அது வியாழனாகவும் அதன் திரேக்கானமாகவும்
இருந்தால், ரிதுவானது ஹேமந்தாவாக (தனுசு-கும்பம்) இருக்கும். அது சனியாகவும் அதன் திரேக்கானமாகவும்
இருந்தால், ரிதுவானது சிசிராவாக (கும்பம்-மீனம்) இருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
கோள்கள் பிரசன்ன இலக்கினத்தில் இருந்தால், ரிதுவானது அதில் வலிமை வாய்ந்த கோளின் ரிதுவாக
பிறக்கும்போது இருக்கும்.
4. ஒருவேளை,
பத்தி 1-ல் தீர்மானித்தவாறு அயனமானது உத்திராயனமாக இருந்தால், பிறப்பின் மாதமானது மகரத்திற்கும்
மிதுனத்திற்கும் இடையில் இருக்கும். ஒருவேளை பிரசன்ன இலக்கினத்தில் சந்திரன் இருந்தால்
அதன் ரிதுவானது வர்ஷாவாகும்( சிம்மம்-கன்னி). அத்தகைய நிலையில், சுக்கிரனின் ரிது,
அதாவது சந்திரனுக்கு மாற்றான கோள், வசந்தா
(மேசம்-ரிசபம்) ரிதுவானது, பத்தி 3-ல் விளக்கவுள்ளபடி, பிறக்கும்போது இருந்த ரிதுவாக தீர்மானிக்கப்படும்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment