Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, January 27, 2017

புதனால் அரசனாகும் யோகம் - பிருகத் ஜாதகா – 102


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினொன்று

அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி

புதனால் அரசனாகும் யோகம்

16.        புதன் வலிமை மிக்கதாக இருப்பதுடன் அது இலக்கினத்திலும்(1) இருக்க, வலிமை மிகுந்த கோள்(2) 9வது வீட்டில் இருக்க(3) மற்ற கோள்கள் முறையே, 9வது, 2வது, 3வது, 6வது, 10வது, 11வது (4) வீடுகளில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அரச குடும்பத்தினைச் சார்ந்தவராக இருந்தால்(5), சிறந்த அரசனாக ஆவார்.

குறிப்பு:

(1)    அது 12 இராசிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
(2)    அது, வியாழன் அல்லது வெள்ளியாக இருக்க வேண்டும்
(3)    பிறக் குறிப்புகளின்படி, அது நான்காவது வீடு.
(4)    உரையாசிரியரின் கருத்துப்படி, எப்படி இருப்பினும்
(5)    இல்லையெனில், செல்வந்தராக மட்டுமே முடியும்.


17.        ரிசபமானது இலக்கினமாக இருக்க, அதில் சந்திரன் இருக்கவியாழன் 2வது வீட்டிலும், சனி 6வது வீட்டிலும், மற்ற கோள்கள் 11வது வீட்டிலும் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அவர அரச குடும்பத்தினைச்(1) சார்ந்தவராக இருந்தால், அரசன் ஆவார்.

மேலும், வியாழனானது நான்காவது வீட்டில் இருக்க, சூரியனும் சந்திரனும் 10வது வீட்டில் இருக்க, சனியானது இலக்கினத்தில்(2) இருக்க, மற்ற கோள்கள் 11வது வீட்டில் இருக்க, பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச்(3) சார்ந்தவராக இருந்தால், அரசன் ஆவார்.


குறிப்பு:

(1)    இல்லையெனில், செல்வந்தர் மட்டுமே ஆக முடியும்.
(2)    இது 12 இராசிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்உரையாசிரியரின் கருத்துப்படி.
(3)    இல்லையெனில், செல்வந்தர் மட்டுமே ஆக முடியும்.


18.        சந்திரன் 10வது வீட்டில் இருக்க, சனியானது 11வது வீட்டிலும், வியாழன் இலக்கினத்திலும், புதனும் செவ்வாயும் 2வது வீட்டிலும், சூரியனும் வெள்ளியும் 4வது வீட்டிலும் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச்(1) சார்ந்தவராக இருந்தால், அரசன் ஆவார்.

மேலும், செவ்வாயும் சனியும் இலக்கினத்தில் இருக்க, சந்திரனானது 4வது வீட்டிலும், வியாழன் 7வது வீட்டிலும், வெள்ளி 9வது வீட்டிலும், சூரியன் 10வது வீட்டிலும், புதன் 11வது வீட்டிலும், இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச்(2) சார்ந்தவராக இருந்தால், அரசன் ஆவார்.


குறிப்பு:

(1)    மற்றும் (2) இல்லையெனில் அவர் செல்வந்தராக மட்டுமே ஆக முடியும்.


யோகங்கள் தொடரும்….


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: