வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினொன்று
அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி
வர்க்கோத்தம சந்திரன் அல்லது இலக்கினத்தின் யோகம்
3. இலக்கினம் அல்லது சந்திரன் வர்க்கோத்தம நிலையில்
இருக்க, சந்திரனைத் தவிர அனைத்துக் கோள்களும், நான்கு, ஐந்து, ஆறு என பல தொகுப்பில்
கோள்கள் இருக்க, அவை இலக்கினம் அல்லது சந்திரனுடன் தொடர்பில் இருக்கும் நிலயில் கிடைக்கும்
யோகங்களின்படி, ஒவ்வொரு வகைக்கும் கிடைக்கும்
யோகங்களின் எண்ணிக்கையானது 22 ஆகும்.
குறிப்பு:
இதன்படி,
மொத்தம் 44 யோகங்கள் கூறப்படுகிறது.
ஆறு கோள்கள்
என்பன, சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. அவற்றின்படி, ஒவ்வொன்றும்
நான்கு கோள்கள் கொண்ட 15 தொகுப்புகள் என்பது,
கீழ்வருமாறு:
(1) சூரியன்,
செவ்வாய், புதன், வியாழன்
(2) சூரியன், செவ்வாய், புதன், வெள்ளி
(3) சூரியன்,
செவ்வாய், புதன், சனி
(4) சூரியன்,
செவ்வாய், வியாழன், வெள்ளி
(5) சூரியன்,
செவ்வாய், வியாழன், சனி
(6) சூரியன்,
செவ்வாய், வெள்ளி, சனி
(7) சூரியன்,
புதன், வியாழன், வெள்ளி
(8) சூரியன்,
புதன், வியாழன், சனி
(9) சூரியன்,
புதன், வெள்ளி, சனி
(10) சூரியன்,
வியாழன், வெள்ளி, சனி
(11) செவ்வாய்,
புதன், வியாழன், வெள்ளி,
(12) செவ்வாய்,
புதன், வியாழன், சனி
(13) சூரியன்,
புதன், வெள்ளி, சனி
(14) செவ்வாய்,
வியாழன், வெள்ளி, சனி
(15) புதன்,
வியாழன், வெள்ளி, சனி
மீண்டும்,
இதே ஆறு கோள்கள், ஒவ்வொன்றும் ஐந்து கோள்கள் கொண்ட, ஆறு தொகுப்புகள்
(1) சூரியன்,
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி
(2) சூரியன்,
செவ்வாய், புதன், வியாழன், சனி
(3) சூரியன்,
செவ்வாய், புதன், வெள்ளி, சனி
(4) சூரியன்,
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி
(5) சூரியன்,
புதன், வியாழன், வெள்ளி, சனி
(6) செவ்வாய்,
புதன், வியாழன், வெள்ளி, சனி
ஆறு
கோள்களும் மீண்டும் ஒரு தொகுப்பில்.
இவ்வாறு
மொத்தம் 22 தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள கோள்கள், அவற்றின் வர்க்கோத்தம
நிலையில் இலக்கினத்துடன் தொடர்பில் இருக்க, கிடைக்கக் கூடிய மொத்த யோகங்கள் 22 ஆகும்;
அவற்றின் வர்க்கோத்தம நிலையில், சந்திரனுடன் தொடர்பில் இருக்க, கிடைக்கக் கூடிய மொத்த
யோகங்கள் 22 ஆகும். மாண்டவ்யாவின் கருத்துப்படி, மேசத்திலிருந்து 12 இராசிகள், இலக்கினமாகவோ
அல்லது சந்திரன் இருக்கும் வீடாகவோ இருக்கும் நிலையில், ஒவ்வொரு யோகத்திற்கும் கிடைக்கக்
கூடிய மொத்த யோகங்களின் எண்ணிக்கையானது, 44 x 12 அல்லது 528 ஆகும்.
யோகங்கள் தொடரும்….
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment