தசாபுத்திகள் அல்லது கால முறைக் கணிதம்
சோதிட ஆய்வில் நாம் அடுத்து எடுத்துக் கொள்ள
இருப்பது – தசாபுத்திகள் எனும் கணிதம்.
பொதுவாக, சோதிடத்தினை மூன்று உட்கூறுகளில்
பிரிக்கலாம். (1) அடிப்படை அமைப்பு (2) கால நிகழ்வுகள் (3) கோள்களின் நகர்வால் ஏற்படும்
சூழல்கள்.
இதில் அடிப்படை அமைப்பு என்பது – பிறப்பு சாதகம்.
ஒருவரின் வாழ்க்கைக் கட்டமைப்பினை இந்த அடிப்படை சாதக அமைப்புதான் அறிய உதவுகிறது.
நல்ல நிலையில் உள்ளவன் ஆண்டியாவதும், ஆண்டி நிலையில் உள்ளவன் அரசனாவதும் அவரது சாதகக்
கட்டமைப்பின் மூலமே, அதாவது பிறப்பு நிலை சாதகத்தின் மூலமே அறிய முடியும். அதே வேளையில்,
அரச யோகம் இருப்பவன், எந்த காலக் கட்டத்தில் அரசனாக வாய்ப்பு இருக்கும் என்பதை, கால
நிகழ்வு பிரிவுக் கணக்கின் அடிப்படையில் கணிக்க வாய்ப்புள்ளது. அது மிகச் சரியாக அந்தக்
கால நிகழ்வு காலத்தில் எப்போது நிகழும் என்பதை கணிப்பதற்கு கோள்களின் நகர்வுக் கணிதம்
பயன்படுகிறது.
பொதுவாக, கால நிகழ்வுக் கணிதத்தினை, தசா-புத்திக்
கணிதம் என்று சோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த தசா-புத்திக் கணக்கீடு என்பது பல்வேறு
வகையான கணக்கீடுகளைக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 42 வகையான தசா-புத்தி முறைகள் இருப்பதாக
முதுகலை-சோதிட அறிவியல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு பராசரர் அவர்களும்
பல்வேறு தசா-புத்திகள் இருப்பதாகக் கூறுகிறார். பராசரருக்கு காலத்தால் முந்தியவரான
வராக மிகிரர் தமது பிருகத் சாதகத்தில் ஒரு குறிப்பிட்ட தசா முறையினை விளக்குகிறார்.
பல்வேறு காலமுறைக் கணிதம் அல்லது தசாபுத்திக்காலக்
கணிதம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டாலும், தற்போது நடைமுறையில் ஒரு சில நடைமுறைக் கணிதங்களே
இருக்கின்றன.
தற்போது பொதுவாக நடைமுறையில் இருப்பதில் சில
தசைகள் –
1. விம்சோத்திரி
அல்லது நட்சத்திர தசை
2. மூல தசை
3. இராசி
தசை
4. காலச்
சக்கர தசை
5. அஷ்டோத்திரி
தசை
6. யோகினி
தசை
இவற்றில் விம்சோத்திரி தசை பரவலாகவும், மற்ற
தசைகள் வட இந்திய சோதிடக் கணிதத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
விம்சோத்திரி அல்லது நட்சத்திர தசை என்பது
பொதுவில், தென்னிந்திய முறையில், குறிப்பாக தமிழக மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது.
மாமுனி பராசரர் அவர்களின் கூற்றுப்படி, விம்சோத்திரி
தசையே நடைமுறையில் ஒத்து வருகிறது என நமது தென்னிந்திய சோதிடர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வராக மிகிரரின் பிருகத் சாதகத்தில்
வரும் தசா-புத்திகள் மேற்சொன்னவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அதே
வேளையில், அதன் கணித அமைப்பானது, மிகச் சிறப்பாக இருக்கிறது. தர்க்க முறையிலும் ஏற்புடையதாக
இருக்கிறது. ஆனால் அதனைக் கணிதம் செய்வது, சற்றுக் கடினமாகவே இருக்கிறது. எனவேதான்,
அதனை சோதிட அறிஞர்கள் கைவிட்டு விட்டார்களோ எனக் கருத வேண்டியுள்ளது.
அடுத்து வராக மிகிரரின் முறை …
No comments:
Post a Comment