வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்று (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]
10. மேசம், ரிசபம், மிதுனம், கடகம், தனுசு மற்றும் மகரம் முதலிய இராசிகள் இரவு இராசிகள்1;
மேலும் மிதுனத்தைத்
தவிர மற்றவை அவைகளின் கால்கள் மூலம் எழுபவை.2
இதர இராசிகள் அவற்றின் தலையால் எழுபவை3
என்பதுடன், அவை பகல் பொழுதில் வலிமை வாய்ந்தவை4.
இரு மீன்கள் தலை மற்றும் காலால் எழுபவை5.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
1. எனவே,
பகல் இராசிகள் என்பன, சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,
கும்பம் மற்றும் மீனம்.
2. தங்களின்
கால்கலால் எழும் இராசிகள் பிரிஷ்டோதய
ராசிகள் எனப்படுகின்றன,
அவை முறையே மேசம், ரிசபம், கடகம், தனுசு மற்றும் மகரம்.
3. தலையால்
எழும் இராசிகள் சிரோதய இராசிகள் எனப்படுகின்றன,
அவை முறையே மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
மற்றும் கும்பம்.
4. எனவே
பிரிஷ்டோதய
இராசிகள் இரவில் பலம் வாய்ந்தவை.
5. மீனத்தின்
வடிவம் – பத்தி 5-ல் கூறியவாறு.
11. இராசிகளானவை
(மேசத்திலிருந்து)
(சுற்றில்) சுபர் மற்றும் அசுபர், ஆண் மற்றும் பெண்1,
நகர்பவை, நிலையானவை மற்றும் இருநிலை(அசைவு மற்றும் நிலை)2 எனும் நிலையில் உள்ளன. மேசம், ரிசபம், மிதுனம், கடகம் ஆகியவை அவற்றின் முக்கோண இராசிகளுடன்,
முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளைக் குறிக்கின்றன.3
ஒற்றைப்படை
இராசிகளின்
இரண்டு ஹோரைகள் முறையே சூரிய ஹோரை சந்திர ஹோரை எனவும், இரட்டைப்படை
இராசிகளின்
இரண்டு ஹோரைகள் சந்திர மற்றும் சூரிய ஹோரைகள் ஆகும். திரேக்காண அதிபதிகள்4
(குறிப்பிட்ட
இராசிகள்) முறையே, அந்த இராசி, 5வது இராசி மற்றும் 9வது இராசியின் அதிபதிகள் ஆவர்.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
1. மறுமொழியில்
சொல்வதென்றால்,
அனைத்து ஒற்றைப்படை
இராசிகளும்
அசுபர்கள் மற்றும் ஆண் இராசிகள், இரட்டைப்படை
இராசிகள் அனைத்தும் சுபர்கள் மற்றும் பெண் இராசிகள்.
2. மேசம்,
கடகம், துலாம், மகரம் ஆகியவை நகரும் இராசிகள் (சரம்).
ரிசபம்,
சிம்மம், விருச்சிகம்,
கும்பம் ஆகியவை நிலை இராசிகள் (ஸ்திரம்)
மிதுனம்,
கன்னி, தனுசு, மீனம் ஆகியவை இருநிலை (நகர்தல் மற்றும் நிலையான) என்பதுடன் பொது இராசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன(உபயம்).
3. மேசம், சிம்மம், தனுசு ஆகியவை கிழக்கு இராசிகள்;
ரிசபம், கன்னி, மகரம் ஆகியவை தெற்கு இராசிகள்;
மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை மேற்கு இராசிகள்;
கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை வடக்கு இராசிகள்.
4. எடுத்துக்காட்டாக – சிம்மத்தின் திரேக்காண அதிபதிகள் முறையே சூரியன் (சிம்மத்தின் அதிபதி), வியாழன் (5-ம் வீடான தனுசுவின் அதிபதி), செவ்வாய் (9-ம் வீடான மேசத்தின் அதிபதி).
12. ஒரு சிலரின் கூற்றுப்படி1, ஒரு இராசியின் இரண்டு ஹோரைகளின் அதிபதிகள் முறையே, அந்த இராசியின் அதிபதி மற்றும் அதிலிருந்து 11-ம் இராசியின் அதிபதி2; அதேபோல், ஒரு இராசியின் திரேக்காண அதிபதிகள் முறையே, அந்த இராசியின் அதிபதி, அதிலிருந்து 12-ம் இராசியின் அதிபதி மற்றும் 11-ம் இராசியின் அதிபதி3 ஆவர்.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
1. காரக முனி மற்றும் அவர்தம் சீடர்களின் கருத்துப்படி. ஆனால், ஆசிரியரின் கருத்துப்படி இது பத்தி 11-ல் விவரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் அது சத்யாச்சாரியாரின் கருத்தினைச் சார்ந்துள்ளது.
2. எடுத்துக்காட்டாக, தனுசுவின் இரண்டு ஹோரைகள் முறையே வியாழன் (தனுசுவின் அதிபதி), வெள்ளி (11ம் இராசியான துலாத்தின் அதிபதி) ஆகும்.
3. எடுத்துக்காட்டாக, தனுசுவின் மூன்று திரேக்காண அதிபதிகள் முறையே வியாழன் (தனுசுவின் அதிபதி), செவ்வாய் (12-ம் வீடான விருச்சிகத்தின் அதிபதி), வெள்ளி (11-ம் வீடான துலாத்தின் அதிபதி) ஆகும்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment