Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, January 26, 2017

உச்சம் பெற்ற கோள்களினால் அரசனாகும் யோகம் - பிருகத் ஜாதகா – 101


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினொன்று

அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி

உச்சம் பெற்ற கோள்களினால் அரசனாகும் யோகம்


13.        மூன்று அல்லது நான்கு கோள்கள் வலிமைமிக்கதாக இருந்து, அவை தத்தமது உச்ச வீட்டில் அல்லது மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச் சேர்ந்தவராக இருந்தால் அரசன் ஆவார்.

மேலும், ஐந்து அல்லது ஆறு கோள்கள் வலிமை மிகுந்து இருக்க, அவை தத்தமது உச்ச வீட்டில் அல்லது மூலத்திரிகோண வீட்டில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், எளிய வீட்டில் பிறந்திருந்தாலும் அரசன் ஆவார். இரண்டு நிலையிலும், வலிமை மிகுந்த கோள்களின் எண்ணிக்கை மூன்று அல்லது ஐந்திற்கு  குறைவாக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட சாதகர் அரசனாக முடியாது, ஆனால் செல்வந்தர் ஆவார்.

குறிப்பு:

மூன்று அல்லது ஐந்து கோள்கள் வலிமையில்லாமல் இருந்தால், அந்த மனிதன் அரசன் ஆக முடியாது. மேலும், அனைத்து கோள்களும் உச்ச வீடுகளில் அல்லது மூலத்திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. அவற்றில் சில உச்ச வீட்டிலும் மற்றவை மூலத்திரிகோண வீட்டிலும் இருப்பது போதுமானது.

14.        மேசம் இலக்கினமாக இருக்க, சூரியனும்(1) சந்திரனும் அதில் இருக்க, செவ்வாய் மகரத்தில் இருக்க, சனி கும்பத்தில் இருக்க, வியாழன் தனுசுவில் இருக்க, அந்த நிலையில் பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச்(2) சார்ந்தவராக இருந்தால் அரசன் ஆவார்.

குறிப்பு:

(1)    மற்றொரு குறிப்பின்படி, சூரியனானது சிம்மத்தில் இருக்க வேண்டும், மற்றவை அவைகளுக்கு உரிய யோக அமைப்பில் இருக்க வேண்டும்.
(2)    இல்லையெனில், செல்வந்தனாக மட்டுமே ஆக முடியும்.

15.        வெள்ளி நான்காவது வீட்டில் இருக்க, அது அதன் சொந்த வீடாகவும் இருக்க, சந்திரன் 9வது வீட்டில் இருக்க, மற்ற கோள்கள் 3, இலக்கினம் மற்றும் 11வது வீடுகளில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அவர் அரச குடும்பத்தினைச்(1) சார்ந்தவராக இருந்தால், அரசன் ஆவார்.

குறிப்பு:

(1)    இல்லையெனில், செல்வந்தராக மட்டுமே ஆக முடியும்.

வெள்ளியானது சுவஷேத்திரம் எனும் நிலையில், ரிசபம் அல்லது துலாத்தில் இருக்க வேண்டும். அதன்படி, இலக்கினமானது கும்பமாகவோ அல்லது கடகமாகவோ இருக்க வேண்டும். சந்திரனானது 9வது வீட்டில் இருக்க, அது முதலில் கூறியபடி துலாம் வீட்டிலோ, அல்லது இரண்டாவதாகக் கூறியபடி மீனத்திலோ இருக்க வேண்டும், மற்ற கோள்கள் முறையே, 3வது, இலக்கினம், 11வது என இலக்கினத்திலிருந்து இருப்பதுடன், முதல் கணக்கின்படி, மேசம், கும்பம், தனுசு எனவும், இரண்டாவது கணக்கின்படி கன்னி, கடகம், ரிசபம் என இருக்க வேண்டும். இதன்படி, இரண்டு யோகங்கள் இங்கே விளக்கப்படுகின்றன.



யோகங்கள் தொடரும்….


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: