வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினொன்று
அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு
அரசனாகும் யோகம்
1. யவனரின் கூற்றுப்படி, மூன்று அல்லது நான்கு அசுபக் கோள்கள் உச்ச வீடுகளில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் கொடுங்கோல் அரசனாக வாழ்வார்(1). ஜீவ சர்மாவின் கூற்றுப்படி, அத்தகைய கோள்கள் அசுபக் கோள்களாக இருந்தால், அத்தகைய மனிதன் அரசனாகவே முடியாது(2)
குறிப்பு:
(1)
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் அவைகளின் உச்ச வீட்டில் சுப நிலையில் இருந்தால், அந்த மனிதன் நல்ல அரசனாக இருப்பார்; சுப மற்றும் அசுப நிலையில் இருந்தால், அவர் நல்ல மற்றும் தீய அரசனாக இருப்பார். இந்தக் கருத்தினை மனித்தா உறுதி செய்கிறார்.
(2)
ஜீவசர்மாவின் கருத்துப்படி, அத்தகைய மனிதன், செல்வந்தனாக, கோபக்காரனாக, சண்டை சச்சரவில் விருப்பமுடையவனாக இருப்பானேயன்றி, அரசனாக முடியாது. யவனரின் கருத்தில் வராக மிகிரர் உடன்படுகிறார். அவர் தமது சுவப்ல ஜாதகாவில், மூன்று அல்லது அதிக கோள்கள் அவைகளின் உச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதன் அரச குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தால், அரசனாவான்; மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் உச்ச நிலையில் இருந்தால், எந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசனாவான். இதே குறிப்பானது, மூலத் திரிகோணம் மற்றும் திரிகோண வீடுகளுக்கும் பொருந்தும்.
2. செவ்வாய், சனி, சூரியன், வியாழன் ஆகிய நான்கு கோள்களில், நான்கும் அல்லது அவைகளில் மூன்று உச்ச வீடுகளில் இருந்து, அத்தகையக் கோள்கள் இலக்கினத்தில் இருந்தால், இராஜ யோகங்களில் எண்ணிக்கையானது 16 ஆக இருக்கும். அத்தகைய நான்கு கோள்களில், ஏதேனும் இரண்டு அல்லது ஏதேனும் ஒன்று உச்ச வீட்டில் இருக்க, ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு வகையாக இலக்கினத்தில் இருக்க, சந்திரனானது கடகத்தில் இருக்க, கிடைக்கும் இராஜ யோகமானது 16 ஆகும்
குறிப்பு:
இந்த பத்தியில் 32 வகையான இராஜ யோகங்களைக் குறிப்பிடுகிறார். இவைகளில் ஏதேனும் ஒன்றில் ஒருவன் பிறந்திருந்தால் அவன் அரசனாவான்; எடுத்துக்காட்டாக, நான்கு கோள்களும் – செவ்வாய், சனி, சூரியன், வியாழன் – அவைகளின் உச்ச வீட்டில் இருக்க, அதே வேளையில் அவைகளில் ஒன்று உதய இராசியில் இருக்க, கிடைக்கக் கூடிய இராஜ யோகமானது நான்கு. மேலும், நான்கு கோள்களில், ஒவ்வொன்றும் மூன்று கோள்களைக் கொண்ட நான்கு தொகுப்பாக, அதாவது (1) செவ்வாய், சனி, சூரியன் (2) செவ்வாய், சனி, வியாழன் (3) செவ்வாய், சூரியன், வியாழன் (4) சனி, சூரியன், வியாழன் என இருக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பிலும், மூன்று கோள்களும் உச்ச வீட்டில் இருக்க, ஒவ்வொரு கோளும் இலக்கினத்தில் இருக்க , கிடைக்கக் கூடிய இராஜ யோகமானது மூன்றாகும்; அந்த வகையில் அத்தகைய நான்கு தொகுப்பில், கிடைக்கக் கூடிய இராஜ யோகங்களின் எண்ணிக்கையானது 4 x 3 அல்லது 12. இவற்றுடன், முன்பு கூறிய 4 யோகங்களையும் கூட்டிக் கொள்ள நமக்குக் கிடைப்பது 16 யோகங்கள் ஆகும்.
மேலும், மேற்கூறிய நான்கு கோள்களில், ஒரு தொகுப்பிற்கு இரண்டு கோள்கள் என 6 தொகுப்புகள் கிடைக்கும்: (1) செவ்வாய், சனி (2) செவ்வாய், சூரியன் (3) செவ்வாய், வியாழன் (4) சனி, சூரியன் (5) சனி, வியாழன், (6) சூரியன், வியாழன். ஒவ்வொரு தொகுப்பிலும், இரண்டு கோள்களும் உச்ச வீட்டில் இருக்க, ஒவ்வொரு கோளும் உதய இராசியில் இருக்க, கிடைக்கக் கூடிய இராஜ யோகமானது இரண்டு. ஆறு தொகுப்பாக இருக்கையில், அனைத்திலும் கிடைக்கக் கூடிய இராஜ யோகமானது 6 x 2 அல்லது 12. இவ்வாறன 12 தொகுப்பிலும், சந்திரன் கடகத்தில் இருக்க வேண்டும். மேலும், இந்த நான்கு கோள்களும், தனித்தனியாக உச்ச வீட்டில் இருக்க, அத்தகைய வீடானது இலக்கினமாகவும் இருக்க, கிடைக்கக் கூடிய இராஜ யோகமானது நான்கு. இந்த நான்கு வகையிலும், சந்திரன் கடகத்தில் இருக்கும். இந்த நான்கு யோகங்களையும் 12 யோகங்களுடன் கூட்ட, நமக்குக் கிடைப்பது 16 யோகங்கள் ஆகும்.
யோகங்கள் தொடரும்….
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment