தொடர்கிறது......
இராசி மண்டல அமைப்பானது, பூமி மையக் கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதால், பூமியிலிருந்து புதனின் நகர்வை நாம் பார்க்க நேர்கையில் ஏற்படும் காட்சிபிழையே இதற்குக் காரணம் ஆகும்.
கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.
[இப்படம் தமிழோவியம் எனும் வலைப்பூ தளத்தில் சோதிடரத்னா திரு எஸ். சந்திரசேகரன் அவர்களின் ‘நீங்களும் சோதிடராகலாம்’ என்பதில் இருந்து எடுக்கப்பட்டது]
மேலே உள்ள படத்தில் சூரியனைப் புதன் சுற்றிவருதல் வரையப்பட்டுள்ளது. பு1 என்பது முதல் நிலை. அந்த நிலையில் புதன் துலாத்தில் இருக்கிறது. அதன்படி, பு1-துலாம், பு2 – விருச்சிகம், பு3 – தனுசு, பு4 – மகரம், பு5 – மகரம் என நகர்கிறது. அதன் புள்ளிகள் முறையே ஆங்கில எழுத்தான A, B, C, D, E என இராசியில் இருப்பதைப் பாருங்கள்.
பின்னர் புதன் மேலும் நகர்ந்து பு6 எனும் நிலைக்கு வருகிறது. ஆனால் அதன் நகர்வானது பூமிக்கு அருகில் சூரிய வட்டப்பாதையில் வருகிறது. பூமியிலிருந்து பு6-ஐ நாம் பார்க்கும்போது அது F எனும் புள்ளியில் இருப்பதைப்போல் தோற்றம் அளிக்கிறது, அதாவது அதன் பாதையிலிருந்து சற்று பின்னால் இருக்கிறது. அது போலவே பி7 எனும் நிலைக்கு வரும்போது G எனும் புள்ளியிலும், பி8 எனும் நிலைக்கு வரும்போது H எனும் புள்ளியிலும் நகர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது.
மீண்டும் பு1 எனும் நகர்விற்கு வரும்போது, மீண்டும் முன்னோக்கி நகர்வது தொடங்குகிறது. அதாவது, I, J, K, L, M எனும் புள்ளிகளில் இருப்பதுபோல் இருக்கிறது.
இங்கு, A, B, C, D, E, எனும் புள்ளிகள் இயல்பான முன்னோக்கி நகர்தலையும், F, G, H எனும் புள்ளிகள் பின்னோக்கி நகர்தலையும், I, J, K, L, M எனும் புள்ளிகள் மீண்டும் முன்னோக்கி நகர்தலையும் காட்சி-பிழை ஆக்குகின்றன. இந்த சுற்று முடிந்தவுடன், மீண்டும் அடுத்த நிலை ஆரம்பிக்கும்போது, பூமியும் தன் பாதையில் நகர்ந்திருக்கும் என்பதால், அது அடுத்த இராசியில் அதாவது, கும்பம், மீனம் என நகரத்தொடங்கும். இவ்வாறே பன்னிரெண்டு இராசிகளையும் புதன் கடக்கும்.
இங்கு, முதல் நகர்வு என்பது இயல்பான முன்னோக்கிய நகர்வு; இரண்டாவது நகர்வு பின்னோக்கிய நகர்வு அல்லது வக்கிரம்; மூன்றாவது நகர்வான முன்னோக்கிய நகர்வு என்பது வக்கிர நிவர்த்தி என பஞ்சாங்கம் கணிப்பவர்களால் குறிக்கப்படுகிறது.
கோள்களின் வக்கிரம் தொடரும்….
2 comments:
அருமையான விளக்கம்.நன்றி
மிக்க நன்றி.
Post a Comment