வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினொன்று
அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி
அரச யோகம் எப்போது கிடைக்கும்
19. இராஜயோகத்தினைக் கொடுக்கக் கூடிய கோள்கள், அவைகளுக்கு உரிய தசாக் காலத்தில்(1), அதாவது அக்கோள்கள் 10வது வீட்டில் அல்லது இலக்கினத்தில் (2) இருக்கும் நிலையில், அல்லது வலிமை மிக்க கோள்கள்(3) இருக்கும் நிலைக்கேற்ப, ஒருவர் அரச பதவியை ஏற்பார், அதே நேரத்தில், பகைவீட்டில் அல்லது நீச்ச வீட்டில்(4) இருக்கும் கோள்களின் தசாக் காலத்தில்(5) அவர் பதவியை இழப்பதுடன், மற்றொரு அரசனின் அவையில் அடைக்கலம் அடையும் நிலையும் ஏற்படும்.
குறிப்பு:
(1)
அல்லது அந்தர தசையில் – உரையாசிரியரின் கருத்துப்படி
(2)
இலக்கினத்திலும், 10வது வீட்டிலும் கோள்கள் இருக்க, அல்லது பல கோள்கள் இவை இரண்டிலும் இருக்க, அந்த சூழலில் அவைகளின் வலிமைமிக்கதின் அந்தர தசையில்.
(3)
இலக்கினத்திலும், 10வது வீட்டிலும் எந்த கோளும் இல்லாத நிலையில்
(4)
அத்தகைய கோள்கள் வலிமை மிகுந்ததாக இருந்தால், அந்த அரசன் நிரந்தரமாக அரசபதவியினை இழந்துவிடுவார், அவை வலிமை மிக்கவையாக இல்லையெனில், அவரது ஆதரவாளர்களின் உதவியுடன் மீண்டும் அரச பதவியை அடைவார்.
(5)
அல்லது அந்தர தசையில் – உரையாசிரியரின் கருத்துப்படி.
20. வியாழன், வெள்ளி, புதன் ஆகியவை இலக்கினத்தில் இருக்க(1) சனியானது 7வது வீட்டில் இருக்க, சூரியன் 10வது வீட்டில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், சுகங்களுடன் ஏகபோகமாக வாழ்வார்(2).
மேலும், வலிமை மிக்க சுபக் கோள்கள்(3) கேந்திரத்தில்(2) இருக்க, அசுபக் கோள்கள் அசுப வீட்டில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், செல்வந்தானாகவும் தலைமை வேட்டைக் காரனாகவும் அல்லது கொள்ளைக் காரனாகவும் வாழ்வார்.
குறிப்பு:
(1)
உரையாசிரியரின் கருத்துப்படி, உதய இராசி.
இந்த பகுதியில் உள்ள விளக்கத்திற்கு ஒரு சிலர் மறுப்பு தெரிவிக்கிறார்கள் – அதாவது வெள்ளியும் புதனும் (கீழ் நிலைக் கோள்கள்) இலக்கினத்தில் இருக்க, சூரியானானது 10வது வீட்டில் இருக்க முடியாது – அதாவது 60 பாகைக்குமேல் அவை விலகி இருக்க முடியாது. ஆக, சூரியனிலிருந்து அவை விலகி இருக்கக் கூடிய அதிகபட்ச பாகையானது முறையே 47 மற்றும் 29 பாகைகள். அதன்படி, கீழ்வரும் விளக்கம் தரப்படுகிறது:-
“உதய இராசியானது வியாழனின், வெள்ளியின் அல்லது புதனின் வீடாகும்”
பட்ட உத்பலா எனும் உரையாசிரியர், மறுப்பினை ஏற்றுக் கொண்டு – அதாவது இந்த இடைவிளக்கமானது காரகரின் கருத்திற்கு ஏற்புடையது என்கிறார். இதுபோன்ற குறிப்பானது அடுத்த பகுதியில் 5வது மற்றும் 6வது பத்தியில் குறிப்பிடப்படும் வ்ஜர யோகம் மற்ற யோகங்களுக்கும் பொருந்தும். வராக மிகிரர், இருக்க வாய்ப்பில்லாத இந்த யோகத்தினை அனுமதிக்கும் வேளயில், அவர் கூறுவதாவது, அவரது வேலையானது பழமையான ஆசிரியர்களின் கருத்தினைப் பதிவு செய்வது மட்டுமேயன்றி வேறு எதுவும் இல்லை என்பதாகும். – பகுதி-12, பத்தி-6க்கு உரிய குறிப்பின்படி.
(2)
அவர் ஏழ்மையாக இருப்பினும், எத்தகைய யோகத்தில் பிறந்திருந்தாலும்.
(3)
சுபக் கோள்களின் வீடுகள்.
(4)
இந்த பகுதியின் உரை வேறு சிலரால் மாற்றி உரைக்கப்படுகிறது:
“வலிமை மிகுந்த சுபக் கோள்கள் கேந்திரத்தில் இருக்கும்போது”
ஆனால், இந்த கருத்தானது காரகரின் கருத்திற்கு எதிரானது என உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.
அரச யோகம் முற்றும்
அடுத்த பகுதி-12 – நபாச
யோகம்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment