2.
சந்திரன் –
சந்திரன் பூமியின் துணைக்கோள். அது பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு 27.3 நாட்கள். அதாவது, மேசத்தில் ஆரம்பிக்கும் சந்திரன், மீண்டும் மேசம் வருவதற்கு ஏறக்குறைய 27 நாட்கள் ஆகிறது. [பூமி சூரியனைச் சுற்றிவருவதால், சந்திரனானது, ஒரு சுற்றின் முடிவில் சூரியனை நெருங்க மேலும் இரண்டு நாட்கள் தேவைப்படும்]. நமது கணக்கின்படி, 27 நாட்களில் சந்திரன் இராசி மண்டலத்தைச் சுற்றிவரும் என்பதால், ஒரு நாளைக்கு 13-20’-00” நகர வேண்டும். மேற்கூறிய மூன்று பஞ்சாங்கங்களின்படி, சராசரி அளவானது 13-20 பாகை எனும் கணக்கில் இருப்பதால், வானியல் மற்றும் சோதிடம் இரண்டிலும் சந்திரனின் நகர்வு சராசரியில் சரியாகவே இருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு இராசியைக் கடப்பதற்கு
2¼ நாட்கள் தேவைப்படுகிறது. மறுமொழியில் கூறுவதென்றால், 27 விண்மீன்களையும் 27 நாட்களில்
கடக்கிறது.
3. இராகு மற்றும் கேது -
இராகு மற்றும் கேதுவைப் பொருத்தவரையில் அவை இரண்டும் சூரிய – சந்திர பாதைகளின் இடைவெட்டுப் புள்ளிகள், அதாவது வெற்றிட முனைகள் என்பதால், சூரிய-சந்திர பாதைகளின் போக்கிற்கு எதிர் திசையில் (காட்சிப் பிழையில்) நகரும் தன்மை கொண்டவை. கணித அளவீட்டின் படி, ஏறக்குறைய 18½ ஆண்டுகளில் அப்புள்ளிகள் ஒரு முழு சுற்றினை முடிக்கும். எனவே, இராகுவானது மேசத்தில் (துலாம்-கேது) ஆரம்பித்து மீண்டும் மேசத்தில் எதிர்மறையில் சுற்றி வந்து சேர்வதற்கு 18½ ஆண்டுகள் ஆகும். அவ்வாறெனில் ஒரு நாளைக்கு நகரும் அளவு என்பது சராசரியாக – 00-03-00 என்பதாக இருக்கும். வான் கணிதத்தில் இராகு கேது இல்லையென்றாலும், பஞ்சாங்கங்களிலும் இந்த அளவானது சராசரியில் சரியாகவே உள்ளது.
அடுத்து .. பிறக் கோள்களின் நகர்வு...
No comments:
Post a Comment