வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள்
3. துலாம் இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் மது அருந்துவதில் விருப்பம் உடையவர் அல்லது மது தயாரிப்பாளராக இருப்பார்; இயற்கையை விரும்புவராக இருப்பார்; இரசவாதியாகவும் பாவச் செயல்கள் செய்பவராகவும் இருப்பார்.
விருச்சிக இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கோபக்காரராக இருப்பார்; வேலையில் இலக்கு இல்லாமல் இருப்பார்; நச்சு பொருட்களைக் கையால்வதன் மூலம் பணம் சம்பாதிப்பார்(1); ஆயுதப் பயன்பாட்டினை நன்கு அறிந்திருப்பார்.
தனுசு இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் முனிவர்களால் வணங்கப்படுபவராக இருப்பார்; வசதியானவராகவும் தனித்து இயங்குபவராகவும் இருப்பார்; மருத்துவம் மற்றும் சிற்பக்கலை அறிந்தவராக இருப்பார்.
மகர இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அவரின் தகுதிக்கு பொருந்தாத வேலையில் வாழ்நாள் முழுமைக்கும் ஈடுபடுவார்; ஒன்றும் அறியாதவராக இருப்பார்; மலிவான பொருட்களை கையாளுவார்; குறைந்த செல்வம் கொண்டிருப்பார்; பேராசை பிடித்தவராகவும், பிறரின் சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருப்பார்.
குறிப்பு: (1) பிறரின் கருத்துப்படி, அவரது வருமானமானது அவருக்குப் பயன்படாது.
4. கும்ப இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அவரது தகுதிக்குப் பொருந்தாத வேலையினை வாழ்நாள் முழுமைக்கும் மேற்கொள்வார்; ஏழையாக இருப்பார்; அவருக்கு குழந்தைகள் இருக்காது சொத்துக்களும் இருக்காது.
மீன இராசியில் சூரியன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தண்ணீர் தயாரிப்புகளின் மூல வசதியானவராக இருப்பார்; பெண்களால் மதிக்கப்படுவார். பிறக்கும்போது சூரியன் மற்றும் சந்திரன் இருக்கும் நிலைக்கு ஏற்ப இந்த மனிதரின் உடலில், மச்சமோ அல்லது ஏதாவது வடுவோ இருக்கும் (பத்தி 4, பகுதி-1).
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment