வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
2. பிறக்கும்
நேரத்தில், சந்திரன் சிம்மத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் சோதிடராக
இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், செல்வந்தராக இருப்பார்; சுக்கிரனால்
பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; சனியால் பார்க்கப்படுமானால் அவர் நாவிதராக இருப்பார்;
சூரியனால் பார்க்கப்படுமானால், அரசராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் அவர்
அரசராக ஆவார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் கன்னியில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அந்த மனிதர்
அரசராக இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், படையின் தளபதியாக இருப்பார்;
சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அவர் விழிப்புணர்வு மிக்கவராக இருப்பார்; சனியால், சூரியனால்
அல்லது செவ்வாயால் பார்க்கப்பட்டால் அவர் பெண்களின்
கீழ் வேலை செய்வார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் துலாத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவர் அரசராக
இருப்பார்; அது வியாழனால் பார்க்கப்படுமானால், பொற்கொல்லராக இருப்பார்; சுக்கிரனால்
பார்க்கப்பட்டால், அவர் வணிகராக இருப்பார்; சனியால், சூரியனால் அல்லது செவ்வாயால் பார்க்கப்பட்டால் அவர் ஏமாற்று பேர்வழியாக
இருப்பார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரன் விருச்சிகத்தில் இருந்து அது புதனால் பார்க்கப்படுமானால், அவருக்கு
இரட்டை குழந்தைகள் பிறக்கும் (அல்லது வேறு சிலரின் கருத்துப்படி அவருக்கு இரண்டு தந்தைகள்
இருப்பர்); அது வியாழனால் பார்க்கப்படுமானால், பணிவு மிக்கவராக இருப்பார்; சுக்கிரனால்
பார்க்கப்பட்டால், அவர் சலவையாளராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் உடலுறுப்பில்
குறைகள் இருக்கும்; சூரியனால் பார்க்கப்பட்டால் ஏழையாக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால்
அரசராக ஆவார்.
கோள்களின் பார்வை பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment