வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
8. மேசம் அல்லது விருச்சிகத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் சூதாட்டத்தில் விருப்பம் உள்ளவராக இருப்பதுடன், கடனில் வாழ்பவராகவும், குடிகாரனாகவும் இருப்பார்; இறை நம்பிக்கையற்றவராக இருப்பார்; சாத்திரங்களுக்கு எதிராக வாதாடுவார்; திருடனாக இருப்பார்; ஏழையாக இருப்பார்; சராசரியான மனைவியைப் பெற்றிருப்பார்; ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பார்; பொய்யராக இருப்பார்; தவறான வழியில் செல்பவராக இருப்பார்.
ரிசபம் அல்லது துலாத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் மத போதகராக இருப்பார்; நிறைய குழந்தைகளும் நிறைய மனைவிகளும் கொண்டிருப்பார்; பணம் சம்பாதித்தலில் எப்போதும் ஈடுபடுவார்; கொடுப்பதில் தாராளமாக இருப்பார்; குருவை(1) மதிப்பவராக இருப்பார்.
குறிப்பு(1) உரையாசரியரின் கருத்துப்படி, பெற்றோரையும் மதிப்பவராக இருப்பார்.
9. மிதுனத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தற்பெருமை மிக்கவராக இருப்பார்; அறிவியல், இசை, நாட்டியம், ஓவியம் கற்றறிந்தவராக இருப்பார்; இனிமையான பேச்சாளாராக இருப்பார், வசதியானவராக இருப்பார்.
கடகத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தண்ணீர்(1) தொடர்புடைய வேலையின் மூலம் பணம் ஈட்டுபவராக இருப்பார்; அவரது உறவினரால் வெறுக்கப்படுபவராக இருப்பார்.
குறிப்பு(1) பிற நூலின்படி, வலிமையான செயல்பாடுகளின் காரணமாக.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment