வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
5. மேசம் அல்லது விருச்சிகத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர், அரசரால் மதிக்கப்படுபவராக இருப்பார்; இயற்கை விரும்பியாக இருப்பார்; இராணுவத் தலைவராக இருப்பார்; வணிகராக, வசதி மிக்கவராக இருப்பார்; உடலில் காயங்கள் இருக்கும்; திருடராக இருப்பார்; சமயோத புத்தியால் மகிழ்ச்சி அடைபவராக இருப்பார்.
ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் இருக்கும் போது பிறந்த ஒருவர், பெண்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்; நண்பர்களின் அறிவுரையினைக் கேட்பதில் தயக்கம் காட்டுவார்; பிறரின் மனைவியரின் மீது ஆர்வம் கொண்டிருப்பார்; மந்திர தந்திர விளையாட்டுகளை கற்றறிந்தவராக இருப்பார்; அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்; பயந்த சுபாவம் கொண்டிருப்பார்; கரடுமுரடான உடலமைப்பு கொண்டிருப்பார்.
6. மிதுனம் அல்லது கன்னியில் செவ்வாய் இருக்கும்பொது பிறந்த ஒருவர் நல்ல தோற்றம் கொண்டிருப்பார்; குழந்தைகள் இருக்கும் ஆனால் நண்பரகள் இருக்காது; பிறருக்கு உதவுபவராக இருப்பார்; இசையிலும் சண்டையிலும் திறமையானவராக இருப்பார்; கருமியாக இருப்பார்; பயமற்றவராகவும் யாசகம் செய்யும் குணம் கொண்டவராகவும் இருப்பார்.
கடகத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் வசதி படைத்தவராகவும், கடல் கடந்து சென்று செல்வம் சேர்ப்பவராக இருப்பார்; அறிவாளியாக இருப்பார்; உடல் குறைபாடு உடையவராக இருப்பார்; பொல்லாதவராக இருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment