வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
7. சிம்மத்தில் செவ்வாய் இருக்கும்பொது பிறந்த ஒருவர் ஏழையாகவே இருப்பார்; துயரங்களை பொறுமையாக பொருத்தாள்வார்; காடுகளில் அலைவதை விரும்புவார்; பயமற்றவராக இருப்பார்; இரண்டிற்கு மேற்பட்ட மனைவியரும் கொஞ்சம் குழந்தைகளும் கொண்டிருப்பார்.
தனுசு அல்லது மீனத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் நிறைய எதிரிகளைக் கொண்டிருப்பார்; அரசனின் அமைச்சராக இருப்பார்; பரந்த புகழ்பெற்றவராக இருப்பார்; பயமற்றவராக இருப்பார்; குறைந்த அளவிலான குழந்தைகள் கொண்டிருப்பார்.
கும்பத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் எப்போதும் துன்பத்திலேயே இருப்பார்; ஏழையாக இருப்பார்; இடம் விட்டு இடம் நகரக்கூடியவராக இருப்பார்; பொய்யராக இருப்பார்; தன்னிச்சையானவராகவும் பாவியாகவும் இருப்பார்.
மகரத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் மிகுந்த வசதிபடைத்தவராக இருப்பார்; நிறைய ஆண்குழந்தைகள் இருக்கும்; அரசராகும் வாய்ப்பு இருக்கும் அல்லது அரசருக்கும் நிகரானவராக இருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment