வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
14. மேசத்தில் அல்லது விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறர் மனைவியின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்; அத்தகையவர்களின் செல்வாக்கால் தன் சொத்துக்களை இழப்பார்; அவரது குடும்பத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துவார்.
ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தனது சொந்த திறமையாலும் அறிவாற்றலாலும் சொத்துக்களைச் சேர்ப்பார்; அரசரால் விரும்பப்படுவார்; உறவினர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார்; புகழ்பெற்றவராக இருப்பார்; பயமற்றவராக இருப்பார்.
15. மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அரசரின் வேலையைச் செய்வார்; செல்வந்தராக இருப்பார்; இசையைக் கற்றறிந்து இருப்பார்.
கன்னியில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கடின உழைப்பாளியாக இருப்பார்.
மகரத்தில் அல்லது கும்பத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்; பெண்களின் செல்வாக்கிற்கு கட்டுப்பட்டவராக இருப்பார்; சராசரி பெண்களின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்.
16. கடகத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் இரு மனைவிகளைக் கொண்டிருப்பார்; பிச்சைக்காரராக இருப்பார்; பயந்தவராகவும் கோழையாகவும் இருப்பார்; துயரங்களை அனுபவிப்பார்.
சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களின் மூலம் பணம் சம்பாதிப்பார்; திறமையான மனைவியைக் கொண்டிருப்பார்; குறைவாக குழந்தைகளைக் கொண்டிருப்பார்.
தனுசுவில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்; செல்வந்தராக இருப்பார்.
மீனத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கற்றறிந்தவராக இருப்பார்; செல்வந்தராக இருப்பார்; அரசரால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment