வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஏழு
திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி
[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது
போல்
இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]
19. துலாத்தின் முதல் திரேக்காணமானது ஒரு கையில் தராசு
வைத்திருக்கும் மனிதனாகவும், எடை அளவைகளில் திறமை மிக்கதாகவும், எடை அளவை செய்ய வேண்டிய
பொருட்களைக் கையில் சுமந்தும், எண்ணம் முழுமையும் அந்த பொருளின் விலையினை நிர்ணயம்
செய்வதாகவும் இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஒரு மனிதனின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.
20. துலாத்தின்
இரண்டாவது திரேக்காணமானது கழுகின் முக அமைப்பைக் கொண்ட மனிதனாகவும், கையைவிட்டு நழுவும்
நிலையில் ஒரு பானையைக் கையில் சுமந்தும், பசியாலும் தாகத்தாலும் வாடுவதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தையின் மீது எண்ணம் கொண்டதாகவும்
இருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது ஒரு மனிதன் மற்றும் ஒரு பறவையின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி
சனி.
21. துலாத்தின்
மூன்றாவது திரேக்காணமானது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை முகம் கொண்டதாகவும்,
மரத்தில் விலங்குகளின் வடிவத்தினை செதுக்கியதாகவும், தங்கத்தால் ஆன அம்பாராத்துணியை
சுமந்தும், கவச ஆடை அணிந்தும், இறைச்சியும் பழங்களும் சுமந்தும், குரங்கு போன்ற தோற்றமும்,
கையில் வில்லும் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இந்த திரேக்காணமானது மனிதானகவும் நான்குகால் விலங்காகவும் இருக்கும். இதன் அதிபதி புதன்.
திரேக்காணத்தின்
பலன்கள்.தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|